Om Reeng Siva Siva 108 Times Repeat | Traditional Method | Ambur Sistors
Автор: AMBALAWAANAA TV
Загружено: 2020-09-15
Просмотров: 42830
”ஓம் ரீங் சிவ சிவ” என்ற மந்திரத்தை சொல்லும்போது சாப்பட்டுக்கு இல்லை என்று சொல்பவர்கள்கூட விரைவில் நலம் பெறுவார்கள். இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பற்பல சூட்சுமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மந்திரம் சகலத்தையும் அளிக்கும் சௌபாக்கிய மந்திரம் என்று கூறுவார்கள். இதை பற்றி அகத்தியர் நாடியில் கேட்கும் போது பல ரகசியங்களை எடுத்துரைத்தார். இதன் ரகசிய பிரயோக முறைகளை பலவற்றை சுவடியின் மூலம் வெளி உலகிற்கு தந்துள்ளார். மந்திர பிரயோகங்கள் பற்றி இந்த வீடியோவில் உள்ளது.
மிக்க நன்றி அகத்தியர் பாத ரேகை சுவடி வாசிப்பாளர் கோவிலூரான் அவர்கள் மற்றும் ஆம்பூர் சகோதரிகள் ஸ்வாதி மற்றும் ஸ்ருதி அவர்கள்.
அகஸ்தியர் தனது வாத சௌமியம் 1200 என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அதில் ஓம் ரீங் சிவ சிவ என்ற மந்திரம் எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்து கூறியிருக்கிறார் இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.இதனை ஜெபித்து வர நன்மை உண்டாகும். மேலும், இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு, பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம். நினைத்த காரியம் நிறைவேற மற்றும் தொட்டதெல்லாம் துலங்க இந்த திருநீறை அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும். மேலும் இம்மந்திரத்தை தினமும 108 உரு செபிக்க மகிழ்ச்சியான,வளமான வாழ்க்கை வாழ்ந்து முக்திபேறு அடையலாம் என்று வாதசௌமியம் என்னும் நூலில் கூறுகிறார் அகத்தியர். "ஓம் றீங் சிவ சிவ" இந்த மந்திரத்தை ஒரு நல்ல நாளில் செபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த மந்திரத்தை சூரிய உதயத்திற்க்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் சொல்ல வேண்டும்.
Thank you Ambur Sisters - Swathi and Sruthi
#siva #agathiyar #reeng
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: