எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா பாடல் | Entha Oor Endravane song | P. B. Srinivas .
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2023-08-21
Просмотров: 39066
#ssr #padmini #tamilsongs #lovesongs #romantic #sad #kannadasan #4koldsongs
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா பாடல் | Entha Oor Endravane song | P. B. Srinivas . Tamil Lyrics in Description .
Movie : Kattu Roja
Music : K. V. Mahadevan
Starring : S. S. Rajendran, Padmini
Song : Entha Oor Endravane
Singers : P. B. Srinivas
Lyrics : Kannadasan .
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: