IAadi Month Oonjal Seva 2025 I மேல்மலையனூர் அங்காளம்மன் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அலங்காரத்தில் காட்சி
Автор: Aanmiga Boomi
Загружено: 2025-07-24
Просмотров: 2002
#melmalayanurangalamman #angalamman #aanmiga_boomi
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்*
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை நாளான இன்று அதிகாலை முதலே நடைதிறக்கப்பட்டு பால் பன்னீர் தயிர் சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டு புடவை மற்றும் ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட பின் பல்வேறு வண்ண மலர்கள் கொண்டு அர்ச்சனை நடைபெற்றது.
அதன் பின் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் உள்ளிட்ட படையலுடன் அங்காளம்மனுக்கு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
முன்னோர்கள் வழிபாடு செய்ய உகந்த ஆடி அமாவாசை தினமான இன்று பல்வேறு ஊர்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அங்காளம்மனை தரிசிக்க பக்தர்கள் வருகை புரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்காளம்மனை தரிசனம் செய்கின்றனர்.
மேலும் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் இன்று இரவு 10:30 மணிக்கு மேல் நடைபெறும் என்பதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணமே உள்ளனர்.
இதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: