Broohi Mukundeti - ப்ரூஹி முகுந்தேத்தி - ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் - குறிஞ்சி ராகம் ஆதி தாளம்
Автор: चैत्ररथं
Загружено: 2025-08-31
Просмотров: 164
#BroohiMukundethi #sadashivaBrahmendra
ப்ரூஹி முகுந்தேத்தி - ஸ்ரீ முகுந்தனை வணங்கும் ஒரு பாகவத பாடல். இது குறிஞ்சி ராகத்திலும் ஆதி தாளத்திலும் அமைந்துள்ளது. இந்த பாடலை இயற்றியவர் சதாசிவ பிரமேந்திரர். இவர் ஆன்மிக ஞானத்திலும் பக்தியிலும் திளைத்த ஒரு மகான். இந்த பாடலின் மையக் கருத்து, ஓ நாவே! ஸ்ரீ முகுந்தனை சொல்லு.
பகவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்ற ஒரு பரவச பக்தியின் அழைப்பு. இந்த பாடலில் ஸ்ரீ கிருஷ்ணரின் பல நாமங்கள் வருகின்றன. கேசவா, மாதவா, கோவிந்தா, ராதாரமணா, கம்சஹாரா போன்றவை குறிப்பிடதக்கன. ஒவ்வொரு நாமமும் பகவானின் ஒரு தனித்துவமான அம்சத்தையும், லீலைகளையும் பிரதிபலிக்கும் ஒரு நாமஸ்மரண பாகவத பாடல். இசையிலும் பாவத்திலும் பக்திப்பெருக்குடைய இந்த பாடல்.
🎶 பல்லவி
ப்ரூஹி முகுந்தேதி ரஸனே
ப்ரூஹி முகுந்தேதி ரஸனே (ப்ரூஹி)
வாயே! “முகுந்தா” என்று சொல்!
பக்தி நிறைந்த வார்த்தையை உச்சரிக்க!
🌸 சரணம் 1
கேஷவ மாதவ கோவிந்தேதி
கிருஷ்ணானந்தா ஸதானந்தேதி (ப்ரூஹி)
கேஷவா, மாதவா, கோவிந்தா என்று சொல்!
கிருஷ்ணானந்தா, ஸதானந்தா என்று சொல்!
🌿 சரணம் 2
ராதா ரமணா ஹரே ராமேதி
ராஜீவாக்ஷா கனஷ்யாமேதி (ப்ரூஹி)
ராதாரமணா, ஹரே, ராமா என்று சொல்!
ராஜீவாக்ஷா, கனஷ்யாமா என்று சொல்!
🌿 சரணம் 3
கருடகமனா நந்தகஹஸ்தேதி
கண்டித தசகந்தர மஸ்தேதி (ப்ரூஹி)
கருடத்தில் பயணிக்கும், நந்தகா வாளை ஏந்தியவன் என்று சொல்!
ராவணனை அழித்த வீரன் என்று சொல்!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
🌿 சரணம் 4
அக்ரூரப்ரிய சக்கரதரேதி
ஹம்ஸநிரஞ்சன கம்ஸஹரேதி (ப்ரூஹி)
அக்ரூரனின் பிரியமானவன், சக்கரதரன் என்று சொல்!
ஹம்ஸநிரஞ்சனன், கம்ஸனை அழித்தவன் என்று சொல்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: