VIDEO 2 - திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து... || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
Автор: Hajith Ibrahim
Загружено: 2020-11-28
Просмотров: 32557
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு அவர்கள் நாகூர் நாயகம் வசிப்பிடமான நாகூர் நகர் வந்து அவர்களின் தர்பார் முன்னிலையில் அவர்களைப் புகழ்ந்து பாடிய "திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து... தீன் கூறி நிற்பர் கோடி" என்ற பாடல் இசை முரசு E.M.நாகூர் ஹனிபாஅவர்களின் கம்பீரக் குரலில்..
பாடல் வரிகள்
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மா சனாதிபர்க ணதரேந்தியேவந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி
ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் வலீமார்கள்
அணியணியாய் நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞ்ஞானிகள்
அணைந்தருகில் நிற்பர் கோடி
மக்கநகராளும் முஹம்மதிறஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்குமுன்
மகிமை சொல வாயுமுண்டோ
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே
தயவு வைத்தெனையாள் சற்குணங்குடி கொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: