ரமணர் தத்துவம் பாமரனுக்கும் படித்தவனுக்கும்! RAMANA’S PHILOSOPHY FOR THE LAYMAN AND THE EDUCATED
Автор: தினசரி ரமண தியானம் Daily Ramana Dhiyanam
Загружено: 2025-11-15
Просмотров: 368
. நவம்பர் 16. ஞாயிறு
பகவான் ரமணர் தத்துவம்- பாமரனுக்கும் படித்தவனுக்கும்!
கல்லாதவனோ கற்றவனோ ஆத்மா ஒன்றே; ஆன்மாவிற்கு பேதம் கிடையாது. தான் பாமரன் எனற எண்ணமும், தான் பண்டிதன் என்ற ஆணவமும் நீங்கினால் அவன் ஆத்ம சொரூபம்.
—------------------------------------------------
BAGHAVAN RAMANA’S
PHILOSOPHY - FOR THE LAYMAN
AND THE EDUCATED!
THE SOUL of the ILLITERATE and the EDUCATED is the same; there is no difference for the SOUL. When the thought of being a LAYMAN and the thought of being a SCHOLAR are removed, he becomes the SOUL..
—-----------------------------------------------
பகவான் ரமண மகரிஷியின் ஆத்ம தத்துவம் படித்தவனுக்கும் பாமரனுக்குமான எளிய தத்துவம்; தனித்துவமான பொதுவான தத்துவம். மிகவும் எளிமையாக இருப்பதால்தான் அதை நாம் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. எளிமையான நம்மை மிகவும் சிக்கலாக்கி கொண்டு விட்டோம். அதுதான் பிரச்சினை. நம்மை விட்டு நாம் வெகு தூரம் விலகி விட்டோம்.
நம் இருப்பை விட்டு வெகுதூரம் தள்ளி வந்து விட்டோம். இருப்பினும் தன் வீட்டை யாராவது மறக்க முடியுமா? வீடு திரும்ப நினைப்பவர்களுக்கு அது சாத்தியமே. அது மிக சுலபமே. எனவே தான் பகவான் ஆத்ம வித்தை அதி சுலபம் என்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
ஒரு நாள் பகவான் புத்தர் சீடர்கள் முன் வந்து அமர்ந்து தான் வைத்திருந்த சிறிய துணியில் சில முடிச்சிகள் போட்டார். பிறகு சீடர்களைப் பார்த்து யாராவது இந்த முடிச்சிகளை அவிழ்க்க முடியுமா என்று கேட்டார்? ஒரு சீடன் எழுந்து சுவாமி முடிச்சி எப்படி போடப்பட்டுள்ளது? என்பது தெரிந்தால்தான் அதை அவிழ்க்க முடியும் என்று சொன்னான். ஆம். துணி அதே துணிதான். அதில் உள்ள முடிச்சிகள் அதை சிக்கலாகி விட்டது. எவ்வாறு முடிச்சி போடப் பட்டுள்ளது என்பதைப் பார்த்து அவிழ்த்தால் துணி பழைய நிலைக்கு திரும்பும் என்று உபதேசித்தார் புத்தர்.
புத்தர் கையிலிருந்த துணி எப்போதும் துணிதான். முடிச்சி விழும் முன்பும், முடிச்சி விழுந்த பின்னும், முடிச்சி அவிழ்க்கப்பட்ட பின்பும் துணியில் எந்த மாற்றமும் இல்லை. அது எப்போதும் துணிதான். உலகில் நீ யாராயினும், படித்தனோ, பாமரனோ “நீ அது’” தான்.
பகவான் ரமண மகரிஷி கூறுகிறார்: நீ எப்போதும் வேதங்கள் கோஷிக்கும் “அது நீ” எனப்படும் ஆத்ம சொரூபமாகவே இருக்கிறாய். படித்தவன்- பாமரன்,; ஏழை-பணக்காரன்; முதலாளி தொழிலாளி, ஞானி அஞ்ஞானி; குரு- சிஷ்யன் என எல்லா இரட்டைகளிலும் பேதமற்று விளங்குவது இறை சொரூபமான ஆத்மா. அது ஒன்றே.
ஒருவன் தன்னை பெரிய பணக்காரனாக எண்ணி இறுமாப்பு கொள்கிறான். மற்றொருவன் தான் ஏழையாக பிறந்து விட்டோமே என்று ஏங்கித் தவிக்கிறான். ஒருவன் தான் எல்லா சாஸ்திரங்களையும் கற்ற பண்டிதன் என்று ஆணவம் கொண்டு திரிகிறான். மற்றொருவனோ தான் கல்வி கற்க முடியாத கபோதி ஆகிவிட்டோமே என்று கவலை கொள்கிறான். இரண்டுமே கற்பனை.
இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்களை கற்பனையாக நினைத்து நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு விட்டார்கள்.கல்லை சுமந்து திரிகிறோம் .இந்தப் பொய்யான கற்பனை உணர்வுகளே ஒருவரை மற்றொருவரிடம் இருந்து பிரிக்கிறது. பேதப்படுத்துகிறது. கல்லாக கடினமான நெஞ்சு கரைந்து உருகி நம்முடைய ஆதி இயல்பான எண்ணங்கள் அற்ற ஆத்ம நிலைக்கு திரும்ப வேண்டும். அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் “நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக தஞ்சத்தருள் சண்முகனுக்கு” என்று முருகப்பெருமானிடம் கல் நெஞ்சம் கரைந்துருக வேண்டுகிறார்.
பகவானுடைய உபதேசம் எதிர்மறையாக கருதப்படும் கற்றவன்- கல்லாதான் பணக்காரன்- ஏழை, குரு -சிஷ்யன் எல்லோருக்குமான பொதுவான எளிய உபதேசமாகும். பகவான் கூறுவதெல்லாம் தான் எதுவென்று தன்னைப் பாவித்து இருக்கின்றானோ அந்த எண்ணங்களை விடுத்து தன்னை யார்? என்று காண்பது ஆன்மிகம் என்று பணிக்கிறார். அது புதிதாக ஏதோ அடையப்படுவதில்லை. நம்மில் சேர்ந்துள்ள நல்ல -கெட்ட நினைவுகளை நம்மில் இருந்து அகற்றி நம் ஆத்மாவை சுத்தம் செய்து கொள்வதுவே எல்லாம் என்று உபதேசிக்கிறார்.
புதிதாக ஏதாவது அடைவது என்றால் அதற்கு நாம் பிரயத்தனம் பண்ண வேண்டும். ஆனால் நாம் நம்மை அறியாமல் நம் மேல் ஏற்றிக்கொண்ட சுமையை இறக்கி வைப்பது எல்லோருக்கும் சுலபமானது தானே!. இயல்பானது தானே! சுகமானது தானே! என்று பகவான் நம்மைப் பார்த்து கேட்கிறார்.
சுமந்து கொண்டிருக்கும் ஒருவன் எப்பொழுது தன் சுமை இறங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான. நம்முடைய தவறான கற்பனைகளில் இருந்து விடுபடுவது தான் எல்லா ஆன்மிக சாதனைகளும்.
தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய்
தத்துவ மிதுவென் னருணாசலா!
“ஓம் தத் சத்”
—------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: