தமிழே உயிரே || Thamizhe Uyire || தமிழிசைப் பாடல்கள் || Thamizhisai Paadalgal || Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2018-04-18
Просмотров: 29172
பாடல் : தமிழே உயிரே || ஆல்பம் : தமிழிசைப் பாடல்கள் || பாடியவர் : புஷ்பவனம் குப்புசாமி || இயற்றியவர் : உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் || ராகம் : மோகனம் || தாளம் : ஆதி || முன்னுரை : நா அருணாச்சலம் (தலைவர், தந்தை பெரியார் தமிழிசை மன்றம்) || விஜய் மியூஸிக்கல்ஸ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
Song : Thamizhe Uyire || Singer : Pushpavanam Kuppusamy || Lyrics : Unarchikavingar Kasi Anandhan || Raga : Mohanam || Tala : Adhi || Introduction : Na Arunachalam (Leader, Thandhai Periyar Thamizhisai Mandram) || Vijay Musicals || Video : Kathiravan Krishnan
பாடல் வரிகள் || LYRICS :
தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீயில்லையென்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என்நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
அமிழ்தே உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும் செழிக்கும்
தமிழே நீ என் இயக்கம்
தாய் நீ துணையென் வழிக்கும் நடைக்கும்
அமிழ்தே நீத்தரும் இன்பம்
அடியேன் வாழ்வில் வேறெங்கே கிடைக்கும்
தமிழே இன்றுனைப் பழிக்கும்
தர்க்கன் உலகில் இருக்கும் வரைக்கும்
அமிழ்தே நீ வாழும் மண்ணில்
அனலேத் தெறிக்கும் அனலேத் தெறிக்கும்
தமிழே உனக்கேன் கலக்கம்
தாயே பொறம்மா முழக்கம் வெடிக்கும்
அமிழ்தே உனையெவன் தொட்டால்
அவனையென் கைவாள் அழிக்கும் முடிக்கும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: