புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள்
Автор: EDII-TN
Загружено: 2025-08-13
Просмотров: 1859
EDii-TN - https://www.editn.in/
பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்று அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா திரு. ஆதுல் ஆனந்த் இ.ஆ.ப , கூடுதல் தலைமை செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, அவர்கள் தலைமையில், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் வெற்றிப்பெற்ற 50 பள்ளி மாணவர் அணிகளுக்கு ரூ.31.25 இலட்சம் பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் திரு. ரா.அம்பலவாணன் IAAS அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று முதல் இடம்பிடித்த 20 அணிகளுக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் வழங்கினார்.
Entrepreneurship Development and
Innovation Institute (EDII-TN)
Government of TamilNadu
No1. EDI Institute Road, SIDCO industrial Estate
Ekkaduthangal, Chennai -600032.
Website:www.editn.in
Youtube: / @ediitn
Facebook: EDIITamilnadu
Twitter: edichennaitn
Contact : +91-044-22252081/82/83
email: [email protected] | Web: www.editn.in
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: