#175
Автор: Chinmaya Sarveshwara
Загружено: 2022-10-03
Просмотров: 2364
#175 mana-kavalai edhum indri || மனக்கவலை ஏதும் இன்றி #Thiruppugazh #திருப்புகழ் #மனக்கவலை ஏதும் இன்றி
அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார்.
அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ்.
இந்த வீடியோ "மனக்கவலை ஏதும் இன்றி" பாடலின் விளக்கவுரை ஆகும்.
-----------------------------------------
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga.
Collectively the songs are called as Thiruppugazh.
This video has explanation for the song "mana-kavalai edhum indri".
-----------------------------------------
மனக்கவலை ஏதும் இன்றி (பழநி)
பழநியப்பா!
மனதில் கவலைகள் ஏதும் இன்றி,
உமது திருவடியையே தொழுது உய்ய அருள்
-----------------------------------------
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
------------------------------------
பதம் பிரித்தல்
------------------------------------
மனக் கவலை ஏதும் இன்றி, உனக்கு அடிமையே புரிந்து,
வகைக்கும் மநு நூல் விதங்கள் ...... தவறாதே,
வகைப்படி மனோ ரதங்கள் தொகைப்படியினால் இலங்கி,
மயக்கம் அற, வேதமும் கொள் ...... பொருள்நாடி,
வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து, வகையால் நினைந்து,
மிகுத்த பொருள் ஆகமங்கள் ...... முறையாலே,
வெகுட்சி தனையே துரந்து, களிப்பின் உடனே நடந்து,
மிகுக்கும் உனையே வணங்க ...... வரவேணும்.
மனத்தில் வருவோனெ என்று, உன் அடைக்கலம் அதாக வந்து,
மலர்ப்பதம் அதே பணிந்த ...... முநிவோர்கள்,
வரர்க்கும், இமையோர்கள் என்பர் தமக்கும், மனமே இரங்கி,
மருட்டி வரு சூரை வென்ற ...... முனைவேலா!
தினைப்புனம் முனே நடந்து, குறக்கொடியையே மணந்து,
செகத்தை முழுது ஆள வந்த ...... பெரியோனே!
செழித்த வளமே சிறந்த மலர்ப் பொழில்களே நிறைந்த,
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
------------------------------------
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
http://www.chinmayasarveshwara.com/p/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: