அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்தில் பராசக்தி அம்மனாக பக்தர்களுக்கு காட்சி
Автор: Media 369
Загружено: 2025-11-27
Просмотров: 595
கார்த்திகை தீபத் திருவிழா அண்ணாமலையார் கோவிலில் மூன்றாம் நாள் உற்சவம்....
அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி....
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று பகல்நேர உற்சவத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்தில் பராசக்தி அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை செய்து கோயிலின் நான்கு மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் வீதிஉலா வர பக்தர்கள் தரிசனம் செய்தனர்..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: