மஹா கும்பாபிஷேகம் |அருள்மிகு வண்டிமலைச்சி அம்மன் திருக்கோவில்🙏|தோப்பு வணிகர் நடுத்தெரு|நாகர்கோவில்
Автор: Camera Comali
Загружено: 2023-07-06
Просмотров: 443
பேரன்புடையீர்,
நமது பாரத தேசத்தின் புண்ணிய பூமியான தென்குமரி கடலின் அலையோசையில்
வீற்றிருந்து அருள்பாலித்து வரும் குமரி தாயின் கடைக்கண் பார்வையில்
நாகர்கோவில், மீனாட்சிபுரம், தோப்பு வணிகர்தெருவில், வீற்றிருக்கும்
கருணை கடல் கண்கண்ட தெய்வம், வேண்டும் வரம் அளிக்கும் அம்மை அப்பன்
அருள்மிகு வண்டி மலைச்சிஅம்மன் உடனுறை வண்டி மலையன் சுவாமி
மற்றும் பரிவார மூர்த்திகள் புனர்பிரதிஷ்டை மஹாகும்பாபிஷேக விழா
நிகழும் சுபமங்களகரமான சுஸ்த்திஸ்ரீ கொல்லம் 1198ம் ஆண்டு சோபகிருது வருடம்
உத்தராயணம் கிரிஷ்மரிது ஆனி மாதம் 18ம் தியதி (03-07-2028) திங்கள் கிழமையும்
பெளர்ணமி திதியும் மூலம் நட்சத்திரமும் விஷ்டி கரணமும் சித்தயோகமும் கூடின
சுபயோக தினத்தன்று காலை சைவ ஆகம முறைப்படி
புணர்பிரதிஷ்டை மஹாகும்பாபிஷேகம் புர்வாக கிரியைகளுடன் தொடங்கி
ஆனி மாதம் 20ம் நாள் (05-07-2028) புதன்கிழமை
காலை 9.15 மணிக்கு மேல் 10.20 மணிக்கு சிம்ம லக்னத்தில் அருள்மிகு
வண்டி மலைச்சி அம்மண் ௪மேத வண்டி மலையன்
மற்றும் பரிவார மூர்த்திகள் புணர்பிரதிஷ்டை
மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற இருப்பதால்
நமது சமூதாய அன்பர்களும் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்களும்
கலந்து கொண்டு எல்லாம் வல்ல அன்னை அருள்மிகு வண்டி மலைச்சி அம்மன்
அருள்பற்று செல்ல அன்புடன் அழைக்கிறோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: