அமானிதம் நபிமார்களின் குணம்-2 (14-11-25)
Автор: Habeeb Muhammad Dawoodi Nadwi
Загружено: 2025-11-14
Просмотров: 3327
இன்றைய ஜும்ஆவில் அதிகம் ஓதும் படி வலியுறுத்திய துஆ!
📌 நபி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃபில் இருந்து கவலையுடன் மக்கா திரும்பிய போது அல்லாஹ்விடம் கேட்ட துஆ!
"اللَّهُمَّ إِنِّي أَشْكُو إِلَيْكَ ضَعْفَ قُوَّتِي وَقِلَّةَ حِيلَتِي ، وَهَوَانِي عَلَى النَّاسِ ، أَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ، أَنْتَ رَبُّ الْمُسْتَضْعَفِينَ ، أَنْتَ رَبِّي ، إِلَى مَنْ تَكِلُنِي ؟ إِلَى بَعِيدٍ يَتَجَهَّمُنِي؟ أَم إِلَى عَدُوٍّ مَلَّكْتَهُ أَمْرِي؟ إِنْ لَمْ يَكُنْ بِكَ عليّ غَضَبٌ فَلَا أُبَالِي ، وَلَكِنْ عَافِيَتُكَ هي أَوْسَعُ لِيْ ، أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِي أَشْرَقَتْ بِهِ الظُّلُمَاتُ ، وَصَلُحَ عَلَيْهِ أَمْرُ الدُّنْيَا وَالْآخِرَةِ أَنْ تُنْزِلَ بِي سَخَطَكَ ، أَوْ يَحِلَّ عَلى غَضَبُكَ ، لَكَ الْعُتْبَى حَتَّى تَرْضَى ، لا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِكَ"
[அல்லாஹும்ம இலய்க அஷ்கூ ழஃப குவ்வதி, வ கில்லத ஹீலதி, வ ஹவானி அலன்னாஸ். யா அர்ஹமர் ராஹிமீன்! அன்த ரப்புல் முஸ்தல்அஃபீன், வ அன்த ரப்பி. இலாமன் தகில்னி, இலா பயீதின் யதஜஹ்ஹமுனி, அம் இலா அதுவ்வின் மல்லக்தஹு அம்ரி, இல்லம் யகுன் அலய்ய களபுன், ஃபலா உபாலி,வலாகின் ஆஃபியதுக ஹிய அவ்ஸஉ லி, அஊது பிநூரி வஜ்ஹிகல்லதி அஷ்ரகத் லஹு ழுலுமாத், வ ஸலுஹ அலய்ஹி அம்ருத் துன்யா வல் ஆகிறா, மின் அன் துன்zஸில பி களபக், அவ் யஹில்ல அலய்ய ஸஃகதுக், லகல் உத்பா ஹத்தா தர்ளா, வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பிக்.]
இறைவா! என் பலவீனத்தை, திறமையின்மையை மேலும் மக்களிடத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள இகழ்ச்சியை உன்னிடமே நான் முறையிடுகிறேன்.
கருணையாளர்களில் மிக கருணையாளன் நீயே!
பலவீனர்களின் இறைவன் நீயே!
என் ரப்பும் நீயே!
என்னை யாரிடம் நீ ஒப்படைக்க போகிறாய்? தூரத்திலிருந்து என்னை துன்புறுத்தும் ஒருவரிடமா? அல்லது என் விஷயத்தில் அதிகாரம் பெற்றிருக்கும் என்னுடைய எதிரியிடமா?
உனக்கு என் மீது கோபம் இல்லையென்றால், எனக்கு எந்த துன்பமும் பொருட்டல்ல!
ஆனாலும் உன்னுடைய பாதுகாப்பு (ஆஃபியத்) எனக்கு பெரிதும் அவசியமானவை!
இம்மை, மறுமையை சரியாக நடக்கச் செய்த, இருள்களைப் பிரகாசமாக்கிய உன் திருமுகத்தின் ஒளியை நாடி, உன் கோபமும், உன் தண்டனையும் என் மீது விழுவதிலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்!
நீ பொருந்திக் கொள்ளும் வரை நான் முழுமையாக உன்னிடம் பணிவுடன் திரும்புகிறேன்!
இறைவா! உன்னாலன்றி எவ்வித வலிமையும், சக்தியும் எங்களுக்கு இல்லை.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: