உரோமானிய கலை ஒரு பார்வை உரோம கலை @Art vakadeka
Автор: ART VAKADEKA
Загружено: 2024-01-02
Просмотров: 272
கட்டிடக்கலைச் சிற்பங்கள்
உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் கல்லில் பெரிய ஆக்கங்களைச் செதுக்கும் மரபும் வெங்களத்தில் உருவங்களைச் செய்யும் மரபும் அழிந்து விட்டன. சில இயல்பளவு சிலைகள் சாந்தினால் செய்யப்பட்டன. ஆனால், தற்காலத்தில் அவை மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கின்றன.முன்-உரோமானெசுக் ஐரோப்பாவுக்கு உரிய மிகவும் அறியப்பட்டதும், இன்றுவரை நிலைத்திருப்பதுமான பெரிய அளவு சிற்பவேலை ஆளளவு இயேசுவின் உருவத்தைக் கொண்ட மரச் சிலுவை ஆகும். இது 960-965 காலப் பகுதியில் கொலோனின் பேராயர் கேரோவினால் செய்விக்கப்பட்டது. பிற்காலத்தில் பரவலாகப் பயன்பட்ட சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிற்பத்தின் முதல் மாதிரி இதுவெனத் தெரிகின்றது. இது பின்னர் "சான்செல்" வளைவுக்குக் கீழேயுள்ள வளையில் பொருத்தப்பட்டு, 12 ஆம் நூற்றாண்டில் இருந்து கன்னி மரியாளினதும், நற்செய்தியாளர் யோனினதும் உருவங்கள் சிலுவைச் சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் பொருத்தப்பட்டன. 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் உருவச் சிற்பங்களை உருவாக்குதல் மீண்டும் புத்துயிர் பெற்றதுடன், கட்டிடக்கலைச் சிற்பங்கள் பிந்திய உரோமனெசுக் காலத்தின் அடையாளமாகவும் விளங்கின.
@art vakadeka
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: