ஸ்ரீமத் பாகவதம் ப்ரவசன | ஸ்ரீ ஜெய கோவிந்த தாஸ் | SB 1.16.26-30 | 9.2.2025 | ISKCON Bangalore Tamil
Автор: ISKCON Bangalore Tamil
Загружено: 2025-02-18
Просмотров: 253
ஸத்யம் சௌசம் தயா க்ஷாந்திஸ் த்யாக: ஸந்தோஷ ஆர்ஜவம்
சமோ தமஸ் தப: ஸாம்யம் திதிக்ஷோபரதி: ஸ்ருதம்
ஞானம் விரக்திர் ஐஸ்வர்யம் சௌர்யம் தேஜோ பலம் ஸ்ம்ருதி: ஸ்வாதந்த்ரியம் கெளசலம் காந்திர் தைர்யம் மார்தவம் ஏவ ச
ப்ராகல்ப்யம் ப்ரஸ்ரய: சீலம் ஸஹ ஓஜோ பலம் பக:
காம்பீர்யம் ஸ்தைர்யம் ஆஸ்திக்யம் கீர்திர் மானோ 'நஹங்க்ருதி:
ஏதே சான்யே ச பகவன் நித்யா யத்ர மஹா-குணா:
ப்ரார்த்யா மஹத்வம் இச்சத்பிர் ந வியந்தி ஸ்ம கர்ஹிசித்
தேனாஹம் குண-பாத்ரேண ஸ்ரீ-நிவாஸேன ஸாம்ப்ரதம்
சோசாமி ரஹிதம் லோகம் பாப்மனா கலினேக்ஷிதம்
அவருக்குள் பின்வரும் இயல்புகள் குடிகொண்டுள்ளன:
1.உண்மை, 2. தூய்மை, 3. இரக்கம், 4. கோபத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி, 5. சுய திருப்தி, 6. நேர்மை, 7. மனக் கட்டுப்பாடு, 8. புலனு றுப்புக்களின் கட்டுப்பாடு, 9. கடமையுணர்ச்சி, 10. சமத்துவம், 11. பொறுமை,12. ஒரே சீரான மன நிலை, 13. நம்பிக்கை, 14. ஞானம், 15. புலனின்பத் துறவு, 16. தலைமை வகிக்கும் திறமை, 17. வீரம், 18. செல்வாக்கு, 19. அனைத்தையும் சாத்தியமாக்கும் சக்தி, 20. சரியான கட மையை நிறைவேற்றல் 21. பூரண சுதந்திரம் 22. திறமை, 23. எல்லா அழகுகளிலும் முழுமை, 24. அமைதி 25. இளகிய மனம், 26. புத்தி சாதுர்யம், 27.மரியாதை 28. பெருந்தன்மை, 29. உறுதி, 30. எல்லா அறிவிலும் பூரணத்துவம், 31. நன்கு நிறைவேற்றும் திறமை, 32. எல்லாம் புலனின்பப் பொருட்களையும் பெற்றிருத்தல், 33. மகிழ்ச்சி 34. அசைக்க முடியாத தன்மை, 35. விசுவாசம் 36. புகழ், 37. வழிபடும் தன்மை, 38. அகம்பாவம் இல்லா நிலை 39. இருப்பது (கடவுளின் ஆளுமையாக), 40. நித்தியத் தன்மை, மற்றும் பல்வேறு உன்னத குணங்கள், இவையனைத்தும் அவரிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதபடி அவரிடம் நித்தியமாக உள்ளவையாகும். அப்பரம புருஷர், எல்லா நற்குணங்களுக்கும், அழகுக்கும் பிறப்பிடமான பகவான் ஸ்ரீ கிருஷ் ணர், பூமியில் அவர் நிகழ்த்திய உன்னதமான லீலைகளை இப்பொ ழுது முடித்துக் கொண்டு விட்டார். அவர் இல்லாத இந்நேரத்தில், கலி, அதன் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்துள்ளது. எனவே இந்நிலையைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன்.
#ஸ்ரீமத்பாகவதம் #உபன்யாசம் #பக்தி #ஆன்மிகம் #கிருஷ்ணபக்தி #புராணம் #ஹிந்துதர்மம் #SpiritualLecture #Bhagavatam #KrishnaConsciousness #Devotion #Spirituality
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: