பஹ்ரைனில் ஐயா பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்களுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா பஹ்ரைன் மனாமா 27-05-2022
Автор: Nit Digi Media
Загружено: 2022-05-30
Просмотров: 530
Grand Commendation Ceremony for His Excellency Padma Shri Solomon Papaya in Bahrain Bahrain Manama 27-05-2022
பஹ்ரைனில் ஐயா பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்களுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா பஹ்ரைன் மனாமா 27-05-2022
அன்னை தமிழ் மன்றம், பஹ்ரைன் வாழ் தமிழர்கள் சார்பாக, பத்மஸ்ரீ விருது பெற்ற உயர்திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பாராட்டு விழாவும், அத்தோடு தமிழர்கள் அனைவரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியான பிரம்மாண்ட நம்ம ஊரு ஸ்டைல் பட்டிமன்றமும் பஹ்ரைன் செகாயா பகுதியில் அமைந்துள்ள கேரளீய சமாஜத்தில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய தூதரகத்தின் அதிகாரி திரு. ரவிசங்கர் சுக்லா அவர்கள்,
அல்-யாசின் பயிற்சி மையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர்,
அமைதி மற்றும் நல்லெண்ணத்தின் தூதருமான டாக்டர் சுவாத் யாசீன் அவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் பஹ்ரைனில் உள்ள முக்கியஸ்தர்கள், தொழில் அதிபர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் நமது சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கினை ஏற்றி தொடங்கி வைத்தார்கள். பின்பு கொரோனாவினால் உயிரிழந்த நபர்களுக்காக அரை நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பஹ்ரைன் வாழ் தமிழ்க் குழந்தைகளின் பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம்,காவடி ஆட்டம் மற்றும் குச்சிப்புடி நடனம் ஆகியவற்றை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
தூதரகத்தின் அதிகாரி திரு. ரவிசங்கர் சுக்லா, டாக்டர் சுவாத் யாசீன் மற்றும் அனைத்து முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்களை அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. செந்தில் மற்றும் பொது செயலாளர் திரு. தாமரை கண்ணன் அவர்கள் பூங்கொத்து மற்றும் கேடயம் அளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து அன்னை தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு. பழனிச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
இதன் பின்னர் மதிப்பிற்குரிய பேராசிரியர் பட்டிமன்ற நடுவர் ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள் பத்மஸ்ரீ விருது பெற்றதை கௌரவிக்கும் வண்ணமாக, அன்னை தமிழ் மன்றத்தின் "தமிழ்த்தாயின் தலைமகன் -2022" ஆம் ஆண்டிற்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும் பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர் ஐயா திரு. கலில் அல்டைலாமி அவர்களுக்கு அன்னை தமிழ் மன்றத்தின் சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருதும், பஹ்ரைனில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த குழந்தைகளுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அனைவரும் அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா மற்றும் ஐயா திரு பட்டிமன்றம் ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களைப் பற்றிய காணொளி திரையிடப்பட்டது.
இறுதியாக "குடும்ப நிர்வாகத்தில் சிறந்தவர்கள் ஆண்களா?பெண்களா?" என்ற தலைப்பில் நம்ம ஊரு ஸ்டைல் பட்டிமன்றம் நடைபெற்றது.
பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தலைமையில்
ஆண்களே! என்ற அணியின் சார்பாக ஐயா திரு.ராஜா, திரு.ராமராஜ் திரு.பாலமுருகன் ஆகியோரும் பெண்களே ! என்ற அணியின் சார்பில் அம்மையார் திருமதி.பாரதி பாஸ்கர், திருமதி.பவானி பிரேமானந்த் மற்றும் செல்வி.ஷினாஸ் சுல்தானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பட்டி மன்றத்தின் இறுதி வரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.
இறுதியாக இந்நிகழ்வின் பொறுப்பாளர் திரு.பழனிச்சாமி அவர்களை ஐயா பத்மஸ்ரீ உயர்திரு சாலமன் பாப்பையா அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிக் கௌரவித்தார்.
நன்றியுரையை அன்னை தமிழ் மன்றத்தின் சமூகநலத்துறை உதவி செயலாளர் திரு. பிரதீப் அவர்கள் வழங்கினார். மக்கள் ஆரவாரத்துடன் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 1600கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: