தேனி சுயம்வரம். (மாப்பிள்ளைகள்.. பெண்கள்) ....PART 2.....January 12, 2026
Автор: NEW MOUNAMALARKAL
Загружено: 2026-01-12
Просмотров: 239
🤝🤝🤝🤝(10-01-2026) சனிக்கிழமை தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் முதல் முறையாக நமது டிரீம்ஸ் இந்தியா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் "தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வெற்றி பாதுக்காப்பு இயக்கம்" "திராவிட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற கழகம்" சார்பில் மிகவும் பிரமாண்டமாக "அனைத்து மாற்றுத்திறனாளிகள் இருமனம் இணையும்(சுயம்வரம்) நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள்,விதவை-கணவரால் கை விடப்பட்டவர்கள்,மறுமணம் செய்யக்கூடியவர்கள் ஆர்வமாக வந்து கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 2 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் A.G.மணி தலைமை தாங்கினார்.தேனிமாவட்ட டிரீம்ஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் ஜெய்லானி,மதுரை மாவட்ட டிரீம்ஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் பாத்திமா,டிரீம்ஸ் இந்தியா அமைப்பாளர் பரிமளா,சேலம் மாவட்ட டிரீம்ஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், சிவகங்கை மாவட்ட டிரீம்ஸ் இந்தியா பொறுப்பாளர்கள் வடிவேல் சூரியா,ஆதமை,மஞ்சுளா, கள்ளக்குறிச்சி மாவட்டம் பாஸ்கரன்,திருச்சி மாவட்டம் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக தேனி மாவட்ட சக்ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சேர்ந்த தலைவர் பிரபாகரன், பிரகாஷ், அன்னலெட்சுமி,வீரலெட்சுமி, சொர்ண யோகபதி காந்தி ராஜா,சரண்ராஜ்,ராதிகா,லதா,இந்து மக்கள் கட்சி தலைவர் ராமராஜன் போன்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதியம் அருமையான சாப்பாடு தேனி மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில் வழங்க பட்டது.அல்லி நகரம் 7-வது வார்டு கவுன்சிலர் செல்வி சார்பில் டீ வழங்க பட்டது.தேர்வு செய்யப்பட்ட 2 ஜோடிகளுக்கும் சீர்வரிசைப்பொருட்களுடன் திருமணம் விரைவில் நடத்தி வைக்க படும்.நிகழ்ச்சி மிகவும் அருமையாக நடந்து முடிந்தது.🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: