"பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியே" - Tamil Christian song
Автор: கிறிஸ்தவ சேனல்
Загружено: 2025-05-15
Просмотров: 130
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூடச் செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: