Food for the Soul - Philippians 3:9 - Self identity or identity with Christ
Автор: அப்பத் துணிக்கைகள் - Feed on Crumbs
Загружено: 2025-11-07
Просмотров: 20
Our self identity comes out of self righteousness whereas our identity with Christ is through faith which brings God's righteousness into our life.
Reference Verses:
பிலிப்பியர் 3:3-8
3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
4 மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
5 நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்.
6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
7 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்
அப்போஸ்தலர் 21:37-40
37 அவர்கள் பவுலைக்; கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி; நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்; உனக்கு கிரேக்கு பாஷை தெரியுமா?
38 நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.
39 அதற்குப் பவுல்; நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன். ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
40 உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான். மிகுந்த அமைதலுண்டாயிற்று. அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்.
அப்போஸ்தலர் 22:24-29
24 சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னார்கள்.
25 அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டுப்போது, பவுல் சமீபாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி; ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து; நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும். இந்;த மனுஷன் ரோமன் என்றான்.
27 அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து; நீ ரோமனா? எனக்குச் சொல்என்றான். அதற்கு அவன்; நான் ரோமன்தான் என்றான்.
28 சேனாபதி பிரதியுத்தரமாக; நான் மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்; நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவாகப் பிறந்தேன் என்றான்.
29 அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவாகள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: