ஒகேனக்கல் நீா்வரத்து 53ஆயிரம் கனஅடியாக குறைந்தது | Hoganakkal Inflow
Автор: dharmapuriwebtv
Загружено: 2024-07-23
Просмотров: 1565
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu ஒகேனக்கல் நீா்வரத்து 53ஆயிரம் கனஅடியாக குறைந்தது ,Hoganakkal Inflow, #Hoganakkal ,#ஒகேனக்கல் ,ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 53 ஆயிரம் கனஅடியாக சரிவு.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து அதிகரித்தும் குறைத்தும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 75 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர் வரத்து ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் குறைந்து காலை நிலவரப்படி 70 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. தண்ணீர் வரத்து பகல் ஒருமணி நிலவரப்படி 53000 கன அடியாக மேலும் சரிந்தது. நீா்வரத்து 53 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் ஆற்றுப்பகுதி களில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏழாவது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி தண்ணீரில் மூழ்கி ஆற்றுப்பகுதியும் அருவிப் பகுதியும் ஒரே நீர்மட்ட அளவில் கணப்படுகிறது. ஐவர் பவனி சினி அருவி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. கபினி அணையில் இருந்து இன்று 20 ஆயிரத்து 386 கன அடி தண்ணீரும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 45,327 கன அடி தண்ணீரும் என 58,779 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Hogenakkal Falls: A waterfall in South India on the Kaveri river on the border between Dharmapuri district of Tamil Nadu and Chamrajnagar district of Karnataka.
Kaveri River: The river on which the Hogenakkal Falls is located, considered to form at Talakaveri in the Brahmagiri hills in the Western Ghats of south India.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: