#2 ரேனியஸ் ஐயர் - Rhenius Iyer | Christian Missionary Story in Tamil
Автор: Tamil Christian Repository
Загружено: 2020-07-01
Просмотров: 5844
Missionary Name : Rhenius Iyer
voice : Mrs. Adline Paul
Mission Field. : Tirunelveli (India)
தமிழின் முதல் அறிவியல் புத்தகம் எழுதிய முன்னோடி.
மெய்ஞானபுரம் , சுரண்டை, நல்லூர், டோனாவூர், அடைக்கலாபுரம், கடாட்சபுரம், சத்திய நகரம், கிருபாபுரம் , அன்பின் நகரம் ,
இடையன்குளம், ஆசிர்வாதபுரம் என இவர் உருவாக்கிய அடைக்கலப்பட்டிணங்கள் ஏராளம்.
துண்டு பிரசுர சங்கத்தை நிறுவியவர்.
ஒருநாள் வருமானத்தை படைத்தல், LCF, கைப்பிடி அரிசி காணிக்கை ,
இருவர் இருவராக சென்று சுவிசேஷம் அறிவித்தல்
என புதிய , புதிய ஊழிய உத்திகளை அறிமுகப்படுத்தியவர்.
இலக்கிய முயற்சிகள், கருத்தாக்கங்கள் என - பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான
இவர் மூலம் தான் தென்பாண்டி சீமையில் ஒரு Mass Movement Evangelism சாத்தியமாயிற்று.
இவர் காலத்தில் இந்தியா வந்த யூத மிஷினரி
Dr.Wolf அவர்கள் "Greatest missionary who had appeared since St.Paul" என்று இவரைப் பற்றி சாட்சி கூறினார்.
ரேணியஸ் ஐயர் அவர்கள்
1790-ம் வருடம் நவம்பர் 5-ம் தேதி மேற்கு ரஷ்யாவில் உள்ள மேரியன்பெர்டேர் என்கிற ஊரில் பிறந்தார்.
தனது 6வது வயதில் தந்தையை இழந்தார். 14ம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார்.
ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக்கொண்டார்.
ரேனியசோ ஆத்மீக விஷயத்தில் அக்கறையில்லாதவராக இருந்தார்.
தனது பெரியப்பா வீட்டில் காணப்பட்ட பக்தி வாழ்க்கை அவரை சிந்திக்க வைத்தது.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புகொடுத்தார்.
அந்நாட்காளில் அவர் அதிகமாய் விரும்பி வாசித்தது
இந்தியாவில் தரங்கம்பாடியிலுள்ள மிஷனரிகளின் அறிக்கைகளாகும்.
அதை வாசிக்க வாசிக்க அவருக்குள்ளும் மிஷனெரி தாகம் பற்றிக்கொண்டது,
அதனால் கிறிஸ்துவை அறியாத மற்ற தேசங்களுக்கு அவரை அறிவிக்க வேண்டும் என்கிற தாகம் உண்டாயிற்று.
இதை குறித்து தன் பெரியப்பாவிடம் தெரிவித்தார்.
இதை அறிந்த பெரியம்மா இவரின் இருதயத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனார். .
அம்மாவும் கடல் கடந்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினார்.
கர்த்தர் போக சொன்னால் நான் என்ன செய்யக்கூடும் என்றார்.
அன்று முதல் அவரின் தாயார் அவரை மிஷனெரி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் 1812-ம் வருடம் ரஷ்யாவில் உள்ள லுத்தரன் சபையில் குருப்பட்டம் கொடுக்கப்பட்டது.
1814-ம் வருடம் பெப்ரவரி மாதம் 14-ம் தேதி ரேணியஸ்ம் செனார் என்பவரும் சென்னைக்கு கப்பல் ஏறினர்.
ஜுலை 4-ம் தேதி சென்னை வந்தார் ரேணியஸ்.
தரங்கம்பாடி சென்று தமிழை கற்கத்தொடங்கினார்.
ஐந்தே மாதங்களுக்குள் தமிழை வாசிக்கவும் எழுதவும் கற்றுகொண்டு தெருப்பிரசங்கம் செய்யவும் ஆரம்பித்தார்.
பின்பு சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன்னில் குடியேறினார்.
தன் வீட்டின் பின்னே உள்ள விக்கிரகங்களை வணங்கும் மக்களுக்கு சுவீஷேச பணியை ஆரம்பித்தார்.
சிறுபிள்ளைகளுக்கென்று நற்செய்தி பணியை ஆரம்பிக்க
ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி ஞாயிற்றுக்கிழமைகளில் அதில் ஆராதனையும் நடத்தினார்.
ரேணியஸ் ஊழியத்தில் தனக்கு உதவியாய் இருக்க
வான் சொமுரன் என்ற பக்தியுள்ள டச்சு குடும்பத்தை சார்ந்த
ஆணி என்கிற பெண்ணை மார்ச் மாதம் 7ம் நாள் மணந்தார்.
ஆணி அம்மாள் ரேணியஸ்ன் திருப்பணியில் பங்கெடுத்து அவருக்கு உத்தம துணைவியாக விளங்கினார்.
ரேணியஸ்ன் ஒன்றரை வயதே நிரப்பப்பட்ட குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தது,
இந்த சூழ்நிலையில் கிறிஸ்துவுக்குள் தங்களை திடப்படுத்திக்கொண்டனர்.
இந்த நிலையில் ரேணியஸ் ஐயரை நெல்லைக்கு அனுப்பினால் நலம் என்று CMS குழுவினர் எண்ணினர்.
ரேணியஸ் திருநெல்வேலியில் முதலாவது துவக்கிய பள்ளிக்கூடம் வண்ணாரபேட்டையில் நிறுவியதாகும்.
ஒரு செமினேரியில் உணவருந்தும் நேரத்தில் வந்த ரேணியஸ் சிலர் மட்டும் உட்க்கார்ந்திருப்பதை பார்த்து விவாதித்தார்.
ஜாதி வித்தியாசத்தை கண்டித்து பிரசங்கம் செய்தார்.
ஆயினும் மாணவர்களில் சிலர் நாங்கள் தனியாக உணவருந்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றனர்.
ரேணியஸ் நீங்கள் அனைவரும் போகலாம் செமினேறி முடிவடைந்தது என்றார்.
மேலும் சிலர் கேட்டுக்கொண்டதின் பேரில் வேற்றுமை ஒழிக்கப்பட்டது.
மாற்கு துண்டுத்தாள் பிரசுர சங்கம் என்பதை நிறுவி அதன் மூலம் தேவையான பிரதிகளை எழுதிக் கொடுத்தார்.
பத்துக் கற்பனைகளுடன் ஆரம்பமாகும் அந்த வினாவிடைநூல் கடவுளுக்கு முன்பாக தங்களை பாவிகள் என்று உணர்த்தியது.
அவருடைய இரத்தினாலே மட்டும் பாவ மன்னிப்புக் கிட்டும் என்று அறிந்தனர்.
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்தானம் பெற முன்வந்தனர்.
நீண்ட சுற்றுப்பயணம்செய்து சுவிசேஷத்தை பிரசங்கித்ததின் விளைவாக சபைகள் பெருகின.
ரேணியஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் 371 சபைகளை உருவாக்கினார்.
திருநெல்வேலிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் 107 ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தார்
1825ம் வருடம் மட்டும் 3000 துக்கும் மேற்பட்டோர் சுமார் 90 கிராமங்களில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.
1827ல் புலியூர்குறிச்சி என்னும் கிராமத்தில் ஜெர்மனியில் இருந்த டோனாபிரபு என்பவரது நிதிஉதவியோடு
ரேணியஸ் விலைக்கு வாங்கி அங்கே கிறிஸ்தவர்களை குடியேற்றினார்.
அந்த ஊர் டோனாவூர் என்ற பெயர் பெற்றது.
ரேணியஸ் ஐயர் 1838 ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று மரணமடைந்தார்.
அவரது உடல் அடைக்கலாபுரம் என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இப்பேற்பட்ட ஒரு அப்போஸ்தலருக்கு ஒரு நினைவு சின்னங்கள் நிறுவியிருக்க வேண்டாமா?
எல்லோரும் அவரை மறந்தாயிற்று.
அயராத உழைப்பு, கண்டிப்பு, போர்க்குணங்கள் நிறைந்த ரேனியஸ் ஐயர் அவர்கள்
ஒரு மறக்கப்பட்ட மாமனிதனாக மாறிப் போனார்.
இப்படிப்போல சுவிஷேச தாகத்தோடு எழும்பி புறப்பட ஆயத்தமாவோமா?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: