தேவனே நான் உமது | Devane Naan | சந்தியாகு ஐயர் | Nancy Stephen | James Vasanthan
Автор: James Vasanthan Gospel
Загружено: 2020-08-18
Просмотров: 5810
'Nearer my God to thee' என்கிற பாமாலையைத் தழுவி சந்தியாகு ஐயர் எழுதிய அற்புதமான பாடல்தான் 'தேவனே நான் உமதண்டையில்'. கிறிஸ்தவ சமூகத்தில் இதைப் பாடாதவர்களோ, கேட்காதவர்களோ இருக்கமுடியாது.
பாடப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் எல்லார்க்கும் விளங்கவேண்டும், அதற்கு சொற்கள் சிதையாமல் பாடப்படவேண்டும் என்பதற்காகத் தேவைப்படுகிற சில மாற்றங்களை செய்திருக்கிறேன், இராகமும் பொருளும் மாறாமல். விருப்பமுள்ளவர்கள் இனிமேல் இந்த வரிகளையேப் பாடலாம். - James Vasanthan
Lyric & Tune: Santiago Iyer
Orchestration: James Vasanthan
Singer: Nancy Stephen
Mix & Master: Vibin Baskar
Lyric video: Happy Samuel
தேவனே, நான் உமது அருகினிலே
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியிலே
பாவமாக கோரமாக கொடிய சிலுவை மீதினில் நான்
நொந்து தொங்க நேரிட்டாலும்
ஆவலாய் நான் உம்மைச் சேர்வேன்
யாக்கோபைப்போல் போகும் பாதையிலே
பொழுதாகி மெல்ல
இரவும் வந்து இருளும் மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் எந்தன் கனவில்
உம்மை நோக்கி வந்துச் சேர்வேன்
சொல்ல இயலா நல்ல நாதா
பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு
தருவதெல்லாம் உந்தன் மீட்பு
அன்பைக்கொண்டு என்னை அழைத்தீர்
அன்பின் தேவா, உம்மைச் சேர்வேன்
பொழுது விடிந்து காலை எழுந்ததுமே
மகிழ்வோடு மனதாய்
கர்த்தரே, நான் உம்மைப் போற்றுவேன்
இந்த உலகில் உந்தன் வீடாய்
எந்தன் துயரை நாட்டுவேனே
துன்ப துயரப் பாதை வழியே
இன்னும் உம்மை நெருங்கிச் சேர்வேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: