ஜென்மம் நிறந்தது சென்றவர் வாழ்க|வைரமுத்து வரிகள்|Jenmam Nirainthathu
Автор: N. Jayapalan
Загружено: 2023-06-20
Просмотров: 8656
ஜென்மம் நிறந்தது சென்றவர் வாழ்க|வைரமுத்து வரிகள்|Jenmam Nirainthathu
ஜென்மம் நிறைந்தது சென்றவர்
வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர்
வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசமுலவிய கண்களும் எங்கே
பாய்ந்து துலாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று
இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதி ஒன்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்
மழழையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் உன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
Creative Commons Attribution license (reuse allowed)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: