மலையகப் பகுதிகளில் பட்டி பொங்கல் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டன.
Автор: Iதமிழ் itamil
Загружено: 2026-01-16
Просмотров: 54
மலையகப் பகுதிகளில் பட்டி பொங்கல் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டன.
தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த கால் நடைகளுக்கு உழவர் திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு, தங்களது வாழ்வாதாரத்திற்கும் வருமானத்திற்கும் துணை நின்ற கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மலையக மக்கள் பட்டி பொங்கலை உணர்வுபூர்வமாகவும் விமரசியாகவும் இன்று 16 மாலை சுபவேளையில் கொண்டாடினர்.
மலையகத் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள், பசு எருது ஆடு உள்ளிட்ட கால் நடைகளை அலங்கரித்து, மஞ்சள், குங்குமம் பூசி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவற்றின் முன் பொங்கல் வைத்து, பால் சக்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தங்களின் உழைப்புக்கு துணையாக இருந்து, குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த உதவிய கால் நடைகளுக்கு கௌரவம் அளிப்பதே பட்டி பொங்கலின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வின்போது மூத்தவர்கள் பாரம்பரிய வழக்கங்களை நினைவுகூர்ந்ததுடன், இளைய தலைமுறையினருக்கும் கால் நடைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த பட்டிப்பொங்கல் அமையப்பெற்றன.
மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்துள்ள பட்டி பொங்கல், மனிதன்–இயற்கை–கால் நடை என்ற ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு விழாவாக இன்றும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: