சொட்டுநீர் பாசனத்தில் ஜீவாமிர்தம் கொடுக்கும் முறை_Jeevamrutham through drip irrigation
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2019-06-06
Просмотров: 55506
பெரிய பண்ணைகளுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கும் வழிமுறை
ஜீவாமிர்தத்தை பாசன நீர் மூலமாக கொடுக்கும் வாய்க்கால் பாசனம் என்றால் நேரடியாக கலந்து விட்டுவிடலாம். சொட்டு நீர் பாசனம் மூலமாக கொடுக்கும்போது அதன் கசடுகள் டிரிப்பில் அடைத்துக் கொள்கிறது, இதனால் பாசன நீர் பாய்வதிலும் சிக்கல் ஏற்படும், சொட்டுநீர் குழாய்களை அடிக்கடி பரிசோதனை செய்து தூய்மை செய்ய வேண்டியதும் இருக்கும். இந்த பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
1200 லிட்டர் கொள்ளவுள்ள 3 தொட்டிகளில் ஜீவாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. தொட்டியின் அடிமட்டத்தில் இருந்து அரை அடி மேலே 2 இன்ச் பைப் மூலமாக தயாரான ஜீவாமிர்தம் வெளியே வருகிறது, இவ்வாறு அரை அடி உயர்த்து மேலே உள்ள தெளிந்த வருவதினால் அடியில் உள்ள கசடுகள் கீழேயே தங்கிவிடும். (ஜீவாமிர்தம் கொடுக்கும் அன்று தொட்டியை கலக்கிவிடக்கூடாது.)
வெளியில் வரும் ஜீவாமிர்தம் சிறு ஜல்லிகள் நிறப்பப்பட்ட தொட்டியில் விழுகிறது, விழும் இடத்தில் ஒரு சாக்கை வைப்பதினால சிறு கசடுகள் மேலும் வடிகட்டப்படுகிறது. ஜல்லி வழியாக செல்லும் ஜீவாமிர்தம் மேலும் தூய்மையாக்கப்பட்டு வென்சுரி மூலமாக பாசன நீரில் கலந்து விடப்படுகிறது. இந்த நுட்பம் மூலமாக பெரிய பண்ணைகளுக்கும் எளிதாக ஜீவாமிர்தம் கொடுக்க முடியும்.
தொகுப்பு
ஈஷா விவசாய இயக்கம்
தொடர்புக்கு: 83000 93777
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: