ஏழைக்காத்தம்மன் கோவில் திருவிழா 2022
Автор: மேலூர் நியூஸ் Melur News
Загружено: 2022-09-27
Просмотров: 625
பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் பாரம்பரிய திருவிழா : ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மதுகலயம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு*
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர், உறங்கான்பட்டி, மலம்பட்டி, நயத்தான்பட்டி, குறிச்சிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள 62 கிராமங்களை உள்ளடக்கியதை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்த வெள்ளலூர் நாட்டின் முக்கிய திருவிழாவாக. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் ஏழைகாத்த அம்மன் கோவில் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த திருவிழாவையொட்டி, கடந்த மாதம் 13ம் தேதி வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் வீடு மந்தை முன்பு, வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த 62 கிராம மக்கள் முன்னிலையில் 7 பெண் சிறுமிகளை தெய்வமாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது, இதனைத் தொடர்ந்து தெய்வமாக தேர்ந்தெடுக்கப்படும் 7 பெண் குழந்தைகள். 15 நாட்களும் கோவில் தங்கி 62 கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்குவார்கள். அப்போது மக்கள் தங்களிடம் இருக்கும் நெல், ஆபரணம், உணவு பொருட்களை வழங்கி ஆசி பெறுவார்கள்.
இதனைத் தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான "மதுஎடுப்பு" திருவிழா இன்று வெள்ளலூரில் உள்ள கோவில் வீட்டின் முன்பு தொடங்கியது,
இதற்காக பச்சை நெல்லைக் குத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பாலை, மண்கலயத்தில் நிரப்பி அதன் மீது பிரியாத தென்னைக் குருத்தை வைத்து அலங்காரம் செய்யப்பட்ட மதுகலயம் தயார் செய்யப்படுகின்றது, இதனைத்தொடர்ந்து ஏழைகாத்தம்மன் கோவில் பூசாரி சின்னதம்பி "பெரிய மதுவையும், தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பெண் குழந்தைகள் சிறு மதுவையும் தூக்கி வருகின்றனர், அப்போது அவர்களின் பின்னால் இந்த 62 கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மதுகலயம் மற்றும் சுவாமி சிலைகளை ஊர்வலமாக தலையில் சுமந்து வெள்ளலூரில் இருந்து, கோட்டநத்தாம்பட்டி, நயத்தான்பட்டி, குறிச்சிபட்டி வழியாக 8 கிலோ தொலைவில் உள்ள பெரிய கோவிலுக்கு எடுத்து வந்தனர், அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் பூசாரி மற்றும் 7 பெண் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கு முன்னதாக ஆண்கள் இப்பகுதியில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், குடும்ப நலன் வேண்டியும் உடல் முழுவதும் வைக்கோ
லை திரிப்போல சுருட்டி, உடலில் கால் முதல் கழுத்து வரை சுற்றிக்கொண்டும் முகத்தில் முகமுடி அணிந்துக் கொண்டும், 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்தே வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: