பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
Автор: psd news
Загружено: 2022-10-07
Просмотров: 4
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளாந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் நந்தியம் பெருமான் எழுந்தருளி உள்ளார். பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு விபூதி, மஞ்சள்பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைப்பெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட அருகம்புல், தாமரை, வில்வ இலை. மலர்கள் இவற்றை மாலையாக கோர்த்து நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செப்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர்.

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: