மஹான் ஸ்ரீ சீரடி சாயிபாபா அற்புதங்கள் Epi - 325 Mahan Sri Shirdi Sai Baba Arputhangal | Gopuram Tv
Автор: Gopuram Tv
Загружено: 2025-05-18
Просмотров: 9749
#Shirdi#Saibaba#Baba#Arputhangal#Shirdisaibaba#gopuramtv #prasadganesh
பக்தர்களுக்கு மஹான் ஸ்ரீ சீரடி சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்களின் தொகுப்பு
Join In Gopuram Tv Group Click The Link :
https://whatsapp.com/channel/0029VaIN...
PrasadGanesh , Gopuram Tv : 98416 39190
Sai Mahima Anna Seva , Shirdi. : 89256 86780 / 99403 60493
ஓம் சாய் ராம்
சத்குரு ஸ்ரீ சாய்நாதர் முதன் முதலில் சீரடிக்கு வந்து இறங்கிய இடம் தான் கண்டோபா கோவில்..
இது 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இந்த கோவில் சீரடி பஸ் நிலையத்திற்கு எதிரே, சாய் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது.
இங்கு இருக்கும் மூலவர் கண்டோபா என்பவர் சிவன் வடிவமாவார். அவருடைய மனைவி Banai தாய் கண்டோபாவினுடைய வலது பக்கத்தில் காட்சி கொடுக்கிறார். Banai தாய் பார்வதி மற்றும் கங்கையின் அவதாரம் ஆவார்.
இடது பக்கத்தில் பாபாவின் மகா பக்தரான மகலசாபதியின் சிலை உள்ளது.
அந்தக் கோவிலில் இருக்கும் ஆலமரத்தடியில் தான் பாபா சாந்த்பாய் பாட்டேலின் இல்லத்தின் திருமணத்திற்காக சீரடிக்கு டோங்காவில் வந்து இறங்கினார்.
இந்த இடம் மகலசாபதிக்கு சொந்தமான வயல் பகுதியாகும்..
அதனால் அங்கு இருக்கும் கோவிலில் மகலசாபதி பூசாரியாக இருந்தார்.
பாபா முதல் முதலில் அந்த ஆலமரத்தடியில் வந்து இறங்கும்போது "ஆவோ சாயி "என்று பாபாவுக்கு பெயர் கொடுத்த புண்ணிய இடமும் இதுதான்.
மகலசாபதி பாபாவிற்கு நமஸ்காரம் செய்து அவரை பணிவோடு உட்காரும்படி கேட்டுக் கொண்டார். அவர் பூஜை முடித்த பின்னர் பாபாவை சீரடி கிராமத்திற்குள் அழைத்துச் சென்று காசிராம் சிம்பி மற்றும் அப்பா ஜாகலேவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.. பின்னர் கிராமத்தினர் அனைவரும் அவரை "சாய்பாபா" என்று அழைத்தனர் என்று டாக்டர் கேஷவ் பி கவன்கர் அவருடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பாபா வந்து இறங்கிய அந்த இடத்தில் ஒரு சிறிய பாபா சிலை மற்றும் அவருடைய பாதம் உள்ளது.
பக்தர்கள் அந்த மரத்தை சுற்றி வலம் வந்து பாபாவையும், சிவலிங்கத்தையும் வணங்கி வருகின்றனர்.
பாபாவும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களும், அவருடைய பொருட்களும் என்று எல்லாமே நம்மைப் போல் இருக்கும் சாய் பக்தர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம்தான்.. எல்லாம் அவருடைய ஆசீர்வாதமாக அவர் நமக்கு அருளியது ஆகும்.
அப்படிப்பட்ட அந்த பவித்திரமான ஆலமரத்தை நல்லபடியாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.
நமக்கு பின்னர் நம்முடைய சந்ததியினரும் நம்மைப் போலவே பாபாவை வணங்க இந்த ஆலமரத்திற்கு வருகை புரிவர்.
அதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த மரத்தை எதிர்காலத்தில் பாதுகாக்கும் விதத்தில் கோபுரம் டிவி மற்றும் சாய் மகிமா அன்ன சேவாவினர் அந்த மரத்திற்கு கீழே பளிங்கு கல்லில் பாபாவிற்கு என ஒரு சிறிய கோவில் அமைக்க வேண்டி நினைத்து பாபாவிடம் அதற்கான அனுமதி கேட்டு அவருடைய அருளாசியும் கிடைத்தது.
அந்த ஆலமரம் இருக்கும் இடம் மிகவும் விசேஷமானது.
அங்கேதான் சோட்டே பாபா மற்றும் உபாசினி பாபா தங்கி இருந்தனர்.
சோட்டே பாபா என்பவர் சாய்நாதரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்றும், சாய் நாதர் போலவே அவரும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு துனி அமைத்து உதியை வழங்குவார் .
பாபா இந்த இடத்தில் தான் உபாசனி பாபாவை கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலம் எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார வேண்டும் என்று உத்தரவிட்டதன் பெயரில் உபாசனி பாபா பெரும்பாலும் தனிமையில் இருந்தார்.
சாய் பாபா ,உபாசனி உடைய எதிர்காலம் மிகவும் அருமையாக இருக்கிறது என்றும், யாருக்கும் அதுபோல ஒரு எதிர்காலம் இல்லை என்றும் அவரிடம் தெரிவித்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு உபாசனி மகராஜ் சீரடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாக்கோரி என்ற இடத்திற்கு சென்றார்.
உபாசனி மகாராஜை காண வந்தவர்களுக்கு ஏராளமான அற்புதங்கள் நிகழத் தொடங்கியது.
பாபா தன்னிடம் வரும் பக்தர்களை ஸ்ரீ உபாசனி மகாராஜின் தரிசனத்திற்கு அனுப்பினார்.
இந்த ஆலமரம் இருக்கும் இடத்தில் பாபா சொன்ன காலகட்டம் வரை தங்கிய பின்னர் உபாசனி மகாராஜ் ஞானமடைந்தார் .
இவ்வளவு விசேஷமான இடத்தில் தான் கோவில் அமைக்க பாபாவின் உத்தரவு கிடைத்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த இடத்தில் கோவில் கட்டி பாபாவின் சிலை மற்றும் அவருடைய பாதுகை பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தின் பின்புறம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து முறைப்படி அனைத்தும் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு கோவில் கட்ட பக்தர்கள் தங்களால் இயன்றதை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த கோவில் கட்டும் சேவையை முன்னிட்டு பக்தர்கள் கோபுரம் டிவி மற்றும் சாய் மஹிமா அன்ன சேவாவினரை அணுகுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.
மஹான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா அற்புதங்கள்
All Episodes Playlist Link :
• Mahan Sri Shirdi Saibaba Arputhangal
Don't Miss Like Share Subscribe & Click The Bell
Follow Us on
Instagram
Facebook
&
Twitter
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: