தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ்
Автор: Guganarul (குகனருள்)
Загружено: 2025-06-17
Просмотров: 37081
திருப்புகழ் “எனக்கென யாவும்”|திருப்புகழ் 249|அருணகிரிநாதர் இயற்றியது|
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
திருப்புகழ் 249 – "எனக்கென யாவும்" என்பது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்களில் ஒன்று. இப்பாடலில் அவர், தனுக்கு எதுவும் சொந்தமில்லை என்பதையும், அனைத்தும் இறைவனுக்கே உரியது என்கிற தத்துவத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். மேலும், முருகனே வினைகளை அழிக்கும் வீரன், வேதங்கள் போற்றும் பெருமை என்கிறார் .
அருணகிரிநாதரின் பக்தியும், சிந்தனையின் ஆழமும் இதில் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. இறைவன் மீது நாம் கொள்ள வேண்டிய நிலைமையை உணர்த்துகின்றன. இறுதியாக, அசுரர்களை அழிக்கப் பிறந்த பரஞ்சோதி என்றும், புனிதமான திருத்தணியில் வள்ளியுடன் வீற்றிருக்கும் பெருமாள் என்றும் கூறுகிறார்.
திருப்புகழ் 249 தத்துவப் பொருள்:
இந்த உலகத்தில் நாம் “எனது” என்று எண்ணும் உடல், புத்தி, சொத்து, உறவுகள் ஆகியவை உண்மையில் நமக்கு சொந்தமல்ல. அவை எல்லாம் இறைவனின் கிருபையால் நமக்கு ஏற்பட்டவை. அந்த உணர்வை உண்மையிலேயே உணர்ந்தால், நாம் ஆனந்த நிலைக்கு செல்ல முடியும்.
அருணகிரிநாதர் இப்பாடலில் "எனக்கென யாதும் இல்லை – இறைவனே, என் எல்லாமும் நீயே!" என்ற உயர்ந்த உண்மையை வலியுறுத்துகிறார்.
திருப்புகழ் “எனக்கென யாவும்” பலன்கள்:
· "நான்", "எனது" போன்ற அகந்தையை விலக்கி, ஈஸ்வர சாரத்தை உணரச் செய்கிறது.
· இறைவனிடம் அடிமை உணர்வுடன் ஒப்படைக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
· உள்ளத்தில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி, தெளிவு ஏற்படும்.
· முருகன் அருள் நிகரற்றது என்பதை உணர்த்தும் வகையில் பக்தியை ஆழப்படுத்தும்.
· நல்லது & கெட்டது என்ற இரண்டையும் சமமாக பார்க்கும் மனபான்மை வளர்கிறது
· தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சிக்கு உகந்த மனநிலை உருவாகும்.
· பிறவிப்பிணியை மீள்வதற்கான ஆன்ம சிந்தனை ஏற்படும்.
இதே மாதிரியான காணொளிகள்:
சகல செல்வங்களும் அருளும் திருப்புகழ்
• சகல செல்வங்களும் அருளும் திருப்புகழ் #muru...
தினமும் சொல்ல வேண்டிய திருப்புகழ்
• தினமும் சொல்ல வேண்டிய திருப்புகழ் #murugan...
அவனிதனிலே பிறந்து திருப்புகழ் விளக்கம்
• அவனிதனிலே பிறந்து திருப்புகழ் விளக்கம் | a...
#திருப்புகழ் #அருணகிரிநாதர் #எனக்கெனயாவும்திருப்புகழ் #திருப்புகழ்249 #முருகபக்தி #Thiruppugazh #Arunagirinathar #EnakkenaYavum # Thiruppugazh249Lyrics #ThiruppugazhMeaning #MuruganBhakti
#EnakkenaYavumThiruppugazhMeaning #ThiruppugazhVijayakumar #VijayakumarThirupugazhVideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: