II சிந்தை வண்ணத் தராய்...II Thirunaavukkarasar -II பொன். மு. முத்துக்குமரன் மதுரை
Автор: layamusicindia
Загружено: 2025-11-19
Просмотров: 133
பாடியவர் : #பொன்.மு.முத்துக்குமரன் #மதுரை
#திருவையாறுதிருப்பதிகங்கள்
#ஐந்தாம்-திருமுறை
அ௫ளியவர் : #திருநாவுக்கரசர்
தலம் : #திருவையாறு
சுவாமி: #செம்பொற்சோதீசுவரர் ; அம்பிகை: #அறம்வளர்த்தநாயகி
--------------------------------------------------------------------------------------------------------
,#sundarar , #appar,#Manikkavasagar, #திருத்தணி Nசுவாமிநாதன்,#layamusic,#குமார.சுவாமிநாதன்-கரூர்,#layamusicindia,#agkmusicindia,#thiruvaiyaru,#thirunavukarasar , #tiruttani,#swaminathan,#திருஞானசம்பந்தர்
#muthukandasamidesikar,#osaioliyelaam,#sargurunathan,#mylapore,#oathuvaar, #kapaleeswarar,
---------------------------------------------------------------------------------------------------
DOWNLOAD ALBUM :https://www.jiosaavn.com/album/thiruv...
DOWNLOAD TRACK: https://www.jiosaavn.com/song/sindhai...
----------------------------------------------------------------------------------
Buy CD/MP3 Online : http://www.layamusic.in/store/index.p...
/ @layamusicindia
/ @agkmusicindia
Online Stores : www.layamusic.in / www.layamusic.com
Contact Us : [email protected]
Phone: 044-24990245 / 9884080789
----------------------------------------------------------------------------------------
பாடல் 1;
சிந்தை வண்ணத்தராய்த் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழு நீறணி
சந்தி வண்ணத்தராய்த் தழல் போல்வதோர்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 2;
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராய் நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே
பாடல் 3:
சிந்தை வண்ணமும் தீயதோர் வண்ணமும்
அந்திப் போது அழகாகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 4:
இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணனும் சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 5:
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
மழைக் கண் மாமுகில் ஆகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 6:
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்களாய்க் கனல் மாமணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 7:
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 8:
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுரு ஆகிய வண்ணமும்
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 9:
செய்தவன் திருநீறு அணி வண்ணமும்
எய்த நோக்கு அரிதாகிய வண்ணமும்
கைது காட்சி அரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே
பாடல் 10:
எடுத்த வாளரக்கன் திறல் வண்ணமும்
இடர்கள் போல் பெரிதாகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: