। உலகநாதபுரம் - குழந்தை இயேசு ஆலய கொடியேற்றப் பாடல்।
Автор: Fr. Bastin Bharathy J
Загружено: 2026-01-03
Просмотров: 1470
தயாரிப்பு: அருள்பணி. சுவக்கின் ஞானதாசன்
தொகயாறா
உன்னத கடவுளின் திருமகனே!
உலக மாந்தரின் அருள்முகமே!
உம் திருக்கொடி ஏற்றி!
உம் திருவடி தொழ வந்தோம்!
பல்லவி
அற்புதக் குழந்தை இயேசுவே – எங்கள்
உலகநாதபுர அருள் அமுதே!
உம் திருக்கொடி வானில் உயரப் பறக்குதே!
உம் அருள் மழையில் உள்ளம் நனையுதே!
அனுபல்லவி
உம்மை நாங்கள் மகிமைப்படுத்திட
ஒன்றாய்க் கூடி வந்துள்ளோம்!
உம்மையே நம்பி வாழும் எங்களை
மேன்மை காணச் செய்திடுவாய்!
(அற்புதக் குழந்தை…)
சரணம் 1
எல்லாம் இருந்தும் எளியவர் ஆனீரே!
உருவற்ற தெய்வம்
மனுஉரு எடுத்தீரே!
மாபெரும் அற்புதம் இதுவே அல்லவா!
இம்மானுவேலராய் நீர் இங்கு இருக்க
இனி எந்தக் குறையும்
எமக்கிங்கு இல்லை!
(உம்மை நாங்கள்…)
சரணம் 2
குழந்தை வரம் கேட்டு வேண்டி வருவோர்க்கும்
மழலை நலம் காண
ஏங்கி ஜெபிப்போர்க்கும்
மாபெரும் அற்புதம் செய்பவர் நீரன்றோ!
அற்புத அருளராய் நீர் இங்கு இருக்க
அடியவர் எமக்குக்
குறையேதும் இல்லை!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: