பரலோகப் பிதாவே | Paraloga Pithavae | The Altar
Автор: The Altar
Загружено: 2026-01-13
Просмотров: 123
Paraloga Pithavae (Our Heavenly Father) is a heartfelt musical meditation on the prayer Jesus taught us. It is more than a recitation; it is a plea for the Lord's Prayer to become our lived reality. From seeking daily bread with a contented heart to the difficult act of forgiving those who hurt us, this song invites the Holy Spirit to align our character with Heaven’s will. May our lives, and not just our lips, become a testimony of His Kingdom on earth.
பரலோகப் பிதாவே - இந்தப் பாடல் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் ஆழமான தியானமாகும். இது வெறும் உதடுகளின் ஜெபமாக இல்லாமல், நம் வாழ்வின் அங்கமாக மாற வேண்டும் என்ற வாஞ்சையை வெளிப்படுத்துகிறது. அன்றாட அப்பத்திற்காக நன்றிகூறுதல், மற்றவர்களை மன்னித்தல் மற்றும் தீமையிலிருந்து விலகி நடத்தல் போன்ற வேதாகம உண்மைகளை இப்பாடல் தாங்கி நிற்கிறது. நம்முடைய நடத்தையின் மூலமாக தேவனின் ராஜ்யம் இந்த மண்ணில் வெளிப்பட வேண்டும் என்பதே இந்தப் பாடலின் நோக்கமாகும்.
Biblical References | வேத வசனங்கள்:
Matthew 6:9-13: The Lord's Prayer (கர்த்தர் கற்பித்த ஜெபம்).
Psalm 119:105: "Your word is a lamp to my feet and a light to my path." (உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது).
Matthew 5:16: "Let your light shine before others, that they may see your good deeds and glorify your Father in heaven." (உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, உங்கள் பரலோக பிதாவை மகிமைப்படுத்தும்படி...).
Lyrics
பரலோகப் பிதாவே
இயேசுவே, எங்கள் ரட்சகர்
நீர் கற்பித்த ஜெபம்
எங்கள் வாழ்வாகட்டும்
விண் உலகில் வாசம் செய்யும்
எங்கள் தந்தையே
உம் தூய நாமம், எங்கள்
வீடுகளில் மகிமைப்படுவதாக
உம்மைப் போல மாற
எங்கள் உள்ளத்தில்
தாகத்தை தாருமே
உம் பரிசுத்தம் எங்கள் குணமாக
எங்கள் இயல்பாக மாற வேண்டுமே
வார்த்தையால் மட்டுமல்ல
எங்கள் நடத்தையினால்
உம்மை உயர்த்த கிருபை தாருமே
உம்முடைய ராஜ்யம்
எங்களை ஆளட்டும்
உம்முடைய சித்தம்
எங்களில் நிறைவேறட்டும்
சுய சித்தம் சாகட்டும்
உம் சித்தமாகக்கடவது
பரலோக சமாதானம்
இந்த மண்ணில் வெளிப்படட்டும்
நீர் கற்பித்த ஜெபத்தை
நாங்கள் வாழ்ந்து காட்ட செய்யுமே
உம் சத்தியப் பாதையில்
எங்களை நிலை நிறுத்துமே
அன்பையும், விசுவாசத்தையும் தாரும்
உம்மை போல் இரக்கம் காட்ட உதவுமே
வெறும்
ஜெபம் செய்வோர்
மட்டும் அல்ல
ஜெபமே எங்கள்
வாழ்வாக மாறட்டும்
இயேசுவே!
அன்றாட அப்பத்தை அளிக்கும் தேவனே
போதுமென்ற மனதை உருவாக்குமே
உள்ளதில் மனம் மகிழ்ச்சியாய்
இருக்க கற்றுத்தாருமே
உம் கரத்தின் கீழ்
அடங்கியிருக்க உதவுமே
நாங்கள் செய்த குற்றங்களை
மன்னிக்கும் கிருபையுள்ள தேவனே
எங்களை வேதனைப் படுத்தினவர்களை
மன்னிக்கக் கூடிய இதயம் தாருமே
எங்களை சோதனைக்கு உட்படுத்தாமல்
தீமையில் இருந்து எங்களை மீட்டிடும்
எங்கள் பாதம் சறுக்காமல்
உம் ஒளியின் பாதையில்
நிலைத்திருக்கச் செய்யும்
வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உமக்கே
வாழ்நாள் முழுவதும்
ராஜா உம் ஒருவருக்கே!
வெறும் உதடுகளால் அல்ல
எங்கள் வாழ்வே சாட்சியாகட்டும்
இதயம் தாழ்த்தி
உம் பாதத்தில் பணிகிறோம்
அப்படியே ஆகட்டும்…
ஆமென்
Credits:
Lyrics & Composition: John Shenbagam
Tune & Music Style: AI-Generated
Genre: Reflective Worship / Acoustic Piano & Ambient Strings
Production: The Altar
Note: While the musical arrangement is crafted using AI technology, the lyrics are personally written by me.
© 2026 The Altar / John Shenbagam. All Rights Reserved.
#ParalogaPithavae #TheLordsPrayer #TheAltar #TamilChristianSong #WorshipMusic #JohnShenbagam #TamilWorship #ChristianMeditation #DailyPrayer
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: