இதுவரை யாரும் சொல்லாத பிரபஞ்ச ஈர்ப்பு விதி ரகசியம்|The untold secret of law of attraction|Nambikkai
Автор: Vaanga Pesalam
Загружено: 2021-07-15
Просмотров: 3841
Support the channel:
✔️ Instamojo: https://www.instamojo.com/@nambikkaik...
✔️ PayPal: http://paypal.me/tamilmotivations
✔️ Youtube(Monthly): / @vaangapesalam
Subscribe to our youtube channel, https://goo.gl/C0eF87
இதுவரை உங்களிடம் யாரும் சொல்லாத பிரபஞ்ச ஈர்ப்பு விதி ரகசியம்|The untold secret of law of attraction|Nambikkai Kannan
#NambikkaiKannan
நம்ம யுடியுப் சானலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பற்றி நான் பேசலை.
என்ன காரணம் என்று இந்த வீடியோவில் சொல்ல போகிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி, பல லட்சம் ரூபாய் என்னிடம் வருவதற்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.
கடைசி நிமிடத்தில் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
என்ன காரணம் என்று இந்த வீடியோவில் சொல்ல போகிறேன். முழு வீடியோவை பார்த்தால் தான், இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஜூன் 2019 ஆம் ஆண்டு என்னுடைய முதல் ஆன்லைன் பயிற்சியை தொடங்குவதற்கு திட்டமிட்டேன்.
அந்த பயிற்சியை தயார் செய்வதற்கு சுமார் இரண்டு மாதங்கள் முழு கவனத்தோட வேலை செய்தேன்.
பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மிக சிறப்பான அம்சங்கள், அதில் ஒளிந்திருக்கும் சின்ன சின்ன நுணுக்கங்கள்,
அதை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி அடைவதற்கு எளிய வழிமுறைகள் ஆகியவற்றை மிக சிறப்பாக தயார் செய்தேன்.
உங்களுக்கு எளிமையாக புரிய வேண்டும் என்பதற்காக பல முறை அந்த பயிற்சியை நான் மேன்படுத்தினேன்.
எட்டு வார பயிற்சிகளுக்கு தேவையான வீடியோக்கள், போட்டோ வடிவில் வாசகங்கள், ஒவ்வொரு வாரத்திலும் செய்ய வேண்டிய பயிற்சிகள். எல்லாம் தயாராகி விட்டது.
அந்த பயிற்சியின் பெயர் “வாழ்க்கையை மாற்றும் பயணம்”. அதன் விலை இரண்டு ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தேன். அந்த சமயத்தில் நம்ம யுடியுப் சானலில் ஒரு லட்சம் சப்சைரபர்கள் இருந்தார்கள். வாட்ஸ் ஆப்பில் சுமார் 3000 பேர் இணைந்திருந்தார்கள். குறைந்தபட்சம் 500 பேர் பயிற்சியில் சேர்வார்கள். குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று முழுமையாக நம்பினேன்.
இத்தனை ஆண்டுகள் இலவச வீடியோக்கள், இலவச வாசகங்களை மக்களுக்கு கொடுத்ததற்கு பிரபஞ்சம் கொடுக்கும் பரிசாக நான் கருதினேன்.
மறுநாள் பயிற்சியை பற்றி உங்களிடம் வெளியிடனும் என்பது திட்டம். வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டிய மெசெஜ் தயார் செய்து விட்டேன். கடைசியாக ஒரு வேலை தான் பாக்கி.
"send" button ஐ அழுத்த வேண்டும். ஆனால், என்னால் அதை செய்ய முடியவில்லை. மனதில் ஒரு இனம் புரியாத கவலை. என்ன காரணம் என்று புரியவில்லை. இரண்டு மாத காலம் முழு மூச்சுடன் பயிற்சியை உருவாக்கியதால் மனதில் சோர்வு ஏற்பட்டிருக்குமா என்று நினைத்தேன். அன்றைய இரவு சீக்கிரம் தூங்கி விட்டால் சரியாக விடும் என்று நம்பினேன்.
அப்படியே செய்தேன். ஆனாலு கூட மன நெருடல் நீங்கவில்லை. என்ன ஆச்சுனு புரியலை. எனக்கும், என் மனதிற்கும் உரையாடல் தொடங்கியது.
”இந்த பயிற்சியை வெளியிட வேண்டாம்” என்று மனம் சொன்னது.
“கடந்த இரண்டு மாதங்களாக முழு கவனத்துடன் செயல்பட்டு இந்த பயிற்சியை உருவாக்கியிருக்கிறேன். இது நிச்சயம் மக்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.” என்று நான் சொன்னேன்.
“வேண்டாம். இந்த பயிற்சியை வெளியிட வேண்டாம்” என்று மீண்டும் மனம் சொன்னது.
”நான் என்ன பொழுதுபோக்குக்காக யுடியுப்பில் இருக்கிறேன், பயிற்சியை வெளியிடறேன். என் பொழைப்பே இது தானே.
நான் சுவிடன் நாட்டில் இருக்கிறேன். மாதா மாதம் அலுவகத்தின் வாடகை சுமார் 35,000 ரூபாய். இது தவிர வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு சுமார் 1 லட்சம் ரூபாய்.
எனது வங்கி கணக்கில் பணம் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த பயிற்சியை வெளியிடவில்லை என்றால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படும்.” என்று நான் சொன்னேன்.
”உனக்கு பணம் பெருசா, இல்லை மன நிம்மதி பெருசா” என்று என் மனம் கேட்டது.
“மன நிம்மதி தான். ஆனா, பணம் இல்லைனா எப்படி நிம்மதியா இருக்க முடியும்” என்று நான் கேட்டேன்.
“ஒரு சில மாதங்களுக்கு முன்னர் உன்னிடம் நிறைய பணம் இருந்தது. நீ நிம்மதியா இருந்தீயா?” அப்படினு மனம் கேட்டது.
ஆழமாக சிந்தித்தேன். அதிகளவில் பணம் இருந்த போது, எனக்குள் மன நிம்மதி இருந்துதா?
பிரபஞ்சத்திடம் ஒன்றை கேட்பேன். அது கிடைக்கும் வரை மனதில் நிம்மதி இருக்காது. பிரபஞ்சம் அதை கொடுத்த பிறகு, வேறொன்றை கேட்பேன். அது கிடைக்கும் வரை மனதில் அமைதி இருக்காது.
ஒரு தவிப்பு, ஒரு ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
ஆழமாக சிந்தித்த பிறகு , “நிறைய பணம் இருந்த நேரத்திலும் மனதில் நிம்மதி இல்லை” என்று நான் மனதிடம் சொன்னேன்.
”இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதி மூலம் உனக்கு பணம் கிடைச்சுது. ஆனா, நிம்மதி கிடைக்கலை.
நிம்மதியை கொடுக்காத இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதி பயிற்சியை நீ வெளியிட கூடாது” என்று மனம் சொல்லியது.
”பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நிம்மதியை கேட்கலாமே. அப்ப நிம்மதி கிடைக்குமே” என்று நான் சொன்னேன்.
“நிம்மதியை கேட்டு வாங்க முடியாது. கேட்பதை நிறுத்தி விட்டு, பிரபஞ்சத்திடம் முழுமையாக சரணடைந்தால் தான் நிம்மதி கிடைக்கும்”, என்று என் மனம் சொல்லியது.
இதை சொல்வது மனமா அல்லது பிரபஞ்சமா அப்படின்றது அப்ப என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு, இதை சொன்னது பிரபஞ்சமாக இருக்கலாம் என்று எனக்கு ஒரளவிற்கு புரிந்தது.
இரண்டு மாதங்கள் முழு கவனத்துடன் உருவாக்கிய வாழ்க்கையை மாற்றும் பயணம் பயிற்சியை நான் வெளியிடலை.
பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்று எனக்கு தெரியும். இருந்தாலும், மன நிம்மதி தான் முக்கியம் என்று புரிதலினால் இந்த முடிவை நான் எடுத்தேன்.
வாழ்க்கையை மாற்றும் பயணம் பயிற்சியை புதுசா உருவாக்கினேன்.
அதில் பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பற்றி பேசவில்லை. மன நிம்மதியை அடிப்படையாக வைத்து அந்த பயிற்சியை உருவாக்கினேன்.
மக்களிடம் விளம்பரப்படுத்தினேன். பயிற்சியில் பிரபஞ்ச ஈர்ப்பு விதி பற்றிய விசயங்கள் இருக்காது என்பதை ....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: