பிரம்மாண்டமான Nagore Dargah... வானுயர்ந்து நிற்கும் 5 மினாராக்களின் வரலாறு தெரியுமா
Автор: News18 Tamil Nadu
Загружено: 2025-11-29
Просмотров: 2509
#nagoredargahshariff #nagoresharif #nagoredargah #nagore #NagoreAndavar #shahulhameed #KandhuriFestival #NagoreKandhuri #nagoresharif
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இஸ்லாமிய ஆன்மீக போதகர் ஷாஹுல் ஹமீதுவின் கல்லறை மீதுதான் இந்த நாகூர் தர்கா சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்த நாகூர் தர்காவில் கந்தூரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 469வது கந்தூரி விழாவானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும் டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் விழாவும் நடைபெற உள்ளது.
நாகூரில் பெரிய கோபுரங்கள் போல் காட்சியளிக்கும் ஐந்து மினராக்களில் கந்தூரி விழாக்கான கொடி கடந்த 22ஆம் தேதி ஏற்றப்பட்டது. இந்த 5 மினராக்களுக்கு என்று தனித்தனி வரலாறே இருக்கின்றது. இந்த நாகூர் மட்டும் இல்லாமல் நாகூரைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களையும் தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் நாகூர் ஆண்டவருக்கு நன்கொடையாக வழங்கி இருக்கின்றார்.
இது குறித்து நாகூர் நிர்வாகத்தினர் அகமது கபீர் கூறியதாவது, முதல் மினரா செஞ்சியில் உள்ள இப்ராஹீம் என்பவர் அவர் செய்கின்ற காரியங்களில் வெற்றியும், வணிகத்தில் விருத்தியும் கண்டால் ஒரு மினராவும், மண்டபமும் கட்டித்தருவதாக பிராத்தனை செய்தார்.
அவர் பிராத்தனை நடந்ததால் நாகூர் எல்லையின் தென்மேற்கு மூலையில் மினரா கட்டினார். அதன் பிறகு ஒரு மண்டபமும் கட்டப்பட்டது. இது நாகூர் ஆண்டவரின் மறைவிற்கு பிறகு 77 வது ஆண்டில் கட்டப்பட்டது. இதன் உயரம் 77 அடி ஆகும். தர்காவின் நடுவில் கட்டப்பட்டதால் இது நடுமண்டபம் என்று அழைக்கப்படுகின்றது.
இரண்டாவது மினரா நாகையில் சயீது மரைக்காயர் என்று ஒரு கப்பல் ஏற்றுமதி வியாபாரி இருந்தார். அவர் வேண்டிய பிராத்தனை நிறைவேற்றப்பட்டதால் தர்கா முன் எல்லையின் வடமேற்கில் ஒரு மினரா கட்டப்பட்டது. இது நாகூர் ஆண்டவர் இறந்த பின்பு 122ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இதற்கு தலைமாட்டு மினரா என்று பெயர். இதன் உயரம் சுமார் 93.6 அடி ஆகும்.
மூன்றாவது மினரா சயீது மரைக்காயர் தான் கட்டினார். இது நாகூர் ஆண்டவர் இறந்த 132ஆம் ஆண்டு வடகிழக்கு மூலையில் கட்டப்பட்டதாகும். இதன் உயரம் 93 1/2 அடி உயரமாகும்.
நான்காவது மினராவை பரங்கிப்பேட்டையில் நீதிபதியாக இருந்த தாவூத்கான் என்பவரால் கட்டப்பட்டதாகும். இது நாகூர் ஆண்டவர் மறைவுக்கு பின்பு 150வது ஆண்டில் தென் கிழக்கு புறமாக கட்டப்பட்டதாகும். இது முதலில் ஓட்டுக்கூரையை வைத்து கட்டியதால் ஓட்டு மினரா என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு சீராக கட்டப்பட்டது. இதன் உயரம் 80 அடி ஆகும்.
ஐந்தாவது மினராவை எனக்கு ஒரு மகன் பிறந்தால் இந்த நான்கு மினராவை தாண்டி பெரிய மினராவாக கட்டி தருவதாகவும், ஒரு பெரிய கிராமத்தை மானியமாக தருவதாகவும் அப்போது தஞ்சையை ஆண்ட பிரதாப் சிங் நாகூர் ஆண்டவரிடம் வேண்டினார்.
அவர் வேண்டிய அடுத்த வருடமே மகன் பிறந்தான். அதற்காக மிகவும் உயரமான 131 அடி வானுயர மினராவை கட்டி கொடுத்தார். இது பெரிய மினரா என்று அழைக்கப்படுகின்றது. நாகூர் ஆண்டவர் இறந்த 199ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும் என தெரிவித்தார்.
#NagoreUrus #DargahHistory #TamilNaduTourism #IslamicHeritageIndia
#SufiSaints #Nagapattinam #SouthIndiaCulture #SpiritualIndia
#TamilHistory #News18TamilNadu #TamilNews
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...
• DISCO WITH KS | Discussion With Karthigaic...
• DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...
• Kalam18 | களம்18 | Full Interview Main Pla...
• Local18 Tamil Nadu
• சர்வதேச செய்திகள் | International News | N...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: