உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது
Автор: Erode saba
Загружено: 2023-12-15
Просмотров: 350
தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரிவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது, கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடியானது சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது... முதுபக்கு எனும் இந்த சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி போன்ற ரதங்கள் ஊர்வலமாக நாகையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்தடைந்தன... அதனை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிபு கொடிக்கு தூவா ஓதியதை தொடர்ந்து, வாணவேடிக்கை முழங்க மின் விளக்குகளால் ஜொலித்த நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன... கந்தூரி விழாவின் கொடியேற்ற நிகழ்வில், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்... பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.... நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடுவிழா வரும் 23ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: