இது தெரிஞ்சா ஜோசியம் பார்க்க மாட்டீங்க|2 truths about Astrology|Tamil Self Help|Nambikkai Kannan
Автор: Tamil Motivations
Загружено: 2020-08-23
Просмотров: 4348
இது தெரிஞ்சா நீங்க ஜோசியம் பார்க்க மாட்டீங்க:
ஜோதிடத்தில் மறைந்திருக்கும் 2 உண்மைகள்?
ஜோசியம் என்றால் என்ன?
ஜோசியம் பார்க்கலாமா வேண்டாமா?
மன உறுதி ஜோசியத்தை வெல்லுமா?
இது போன்ற கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் கிடைக்கும்.
1) ஜோசியம் என்றால் என்ன?
எதிர்காலத்தை கணிப்பது அல்லது எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வது. உதாரணம் - எப்போது வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடக்கும்? எப்போது குழந்தை பிறக்கும்? எப்போது தொழில் தொடங்கலாம்?
2) ஜோசியத்தில் இருக்கும் பல வகைகள் என்ன?
கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு ஜோசியம் பார்ப்பது ஒரு வகை. கைரேகையை அடிப்படையாக கொண்டு நாடி ஜோசியம் பார்ப்பது இன்னொரு வகை. இப்படி பல வகை ஜோசியங்கள் இருக்கிறது.
3) ஏன் நிறைய பேர் ஜோசியம் பார்க்கிறார்கள்?
இரண்டே காரணம் தான். ஒன்று, நினைத்தது நடக்க வேண்டும். இரண்டாவது, தோல்வி பயம். இந்த இரண்டையும் எதிர்கொள்ள கற்றுக் கொண்டால், ஜோசியம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
4) நினைத்தது நடக்க வேண்டும் என்ற ஆசை - எப்படி எதிர்கொள்வது?
நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நடக்காது. 50 சதவீதம் தான் வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒன்று நடக்க வேண்டும் என்று ஆசைப்படும் போதே, நடக்காமல் போவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் உங்களுக்கு வர வேண்டும்.
5) தோல்வி பயம் - எப்படி எதிர்கொள்வது?
வெற்றி என்பது என்ன? உங்களின் கடமையை சிறப்பாக, கவனமாக, ஆர்வமாக செய்வது தான் வெற்றி. முடிவு எதிர்ப்பார்த்த மாதிரி இருந்தால், அது கூடுதல் வெற்றி, அதாவது போனஸ். எதிர்ப்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை. ஏனென்றால் அந்த வேலையை மகிழ்ச்சியாக செய்யும் போதே உங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டது. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் உங்களுக்கு வர வேண்டும்.
எனவே, இந்த இரண்டையும் எதிர்கொள்ள கற்றுக் கொண்டால், நீங்கள் ஜோசியம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் நிச்சயம் ஜோசியம் பார்க்க மாட்டீங்க.உங்களின் மன உறுதி ஜோசியத்தை வெல்லும்.
மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களின் பொன்னான கருத்துகளை நிச்சயம் பதிவு செய்யுங்கள்.
வீடியோவை பார்த்ததற்கு என் மனமார்ந்த நன்றி!
நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக, மன அமைதியாக, செல்வ செழிப்பாக வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்,
நம்பிக்கை கண்ணன்
#NambikkaiKannan
Subscribe to our youtube channel, https://goo.gl/bG7zeo
Timestamps:
0:00 Introduction
0:20 What is astrology?
0:50 Different types of astrology
1:10 Why are people seeing astrology?
2:04 The first truth
2:54 Second truth
4:20 Comments time
Follow us on:
Telegram channel - https://t.me/nambikkaikannan
Instagram - / nambikkai_kannan
Facebook - / tamilmotivationalvideos
Email - [email protected]
Website - https://tamilmotivations.com
மேலும் பல பயனுள்ள வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணத் தவறாதீர்கள்.
There are lots of useful videos in below links. Please watch them.
Motivational videos - https://goo.gl/Vn3qGz
How to become rich - https://goo.gl/mEErxy
Tamil cooking videos - https://goo.gl/njOE8t
Marriage motivations - https://goo.gl/5PqhbQ
Parenting videos(Must watch for parents) - https://goo.gl/XHxw09
How to reduce stress - https://goo.gl/Zd9Luo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: