சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன பேழைகளே Saavinai Thool Meethu
Автор: Tamil Tube
Загружено: 2023-11-23
Просмотров: 4174
போரிலே தன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை வணங்கும் மரபு தமிழர்களிடம் காணப்படுகிறது. களத்திலே வீழ்ந்து தன் சனத்தைக் காத்த வீரர்களின் நினைவாக நினைவுக்கல் நாட்டி வழிபடும் மரபு சங்க காலத்திற்கு முன்னைய தொன்மைக்காலம் தொட்டு வழக்கத்தில் இருந்துவருகின்றது. முன்னைய காலத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்கும் வழக்கமே இருந்துவந்துள்ளது. எனினும் பிற்பட்ட காலத்தில் கலாசார மாற்றங்களின் அடிப்படையில் இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. மத அடிப்படையில் இச் செயற்பாடுகள் வேறுபடுகின்றன.
போரில் இறந்த வீரர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என்று மரியாதை செலுத்தி நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநாநூறு எடுத்தியம்புகின்றது. இவ்வழக்கம் பிற்காலத்திலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. போரில் இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்படுகின்ற நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய கிராமியத்தெய்வ வழிபாடுகள் தோற்றம் பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காத்தவராயன், அண்ணன்மார், கன்னிமார் போன்ற கிராமியத் தெய்வ வழிபாட்டு முறைகள் நடுகல் வழிபாட்டின் தொடர்சியைத்தான் பறைசாற்றி நிற்கின்றன.
இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சீன போரியல் அறிஞரான “சன்சூ”என்பவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிற உலகப்போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவன் ஒருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கௌரவப்படுத்துகின்றானோ அவனே சிறந்த வீரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதேபோல போரில் இறந்தவர்களுக்கு எவ்வாறு கல்லறை அமைத்து வணங்கப்பட்டது என்று சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் எடுத்தியம்புகின்றது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: