அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்-முத்தைத்தரு பத்தித் திருநகை | Muthai Tharu Song | sing along lyrics
Автор: Jothi Themozhi
Загружено: 2020-12-24
Просмотров: 871121
திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பாடல்: முத்தைத்தரு பத்தித் திருநகை
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
சந்தம்:
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்து முவர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே !!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: