நாட்டு நலப்பணித்திட்டம் & சமூகப் பணித்துறை இணைந்து கிருஸ்துராஜ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி!
Автор: trichyfastnews
Загружено: 2025-12-24
Просмотров: 3
கிருஸ்து ராஜ் கல்லூரி, பஞ்சப்பூர், திருச்சி-12. நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சமூகப் பணித்துறை இணைந்து கிருஸ்து ராஜ் கல்லூரியில் 24-12-2025 புதன்கிழமை இன்று முற்பகல் 11.30 மணியளவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் நல் ஆசியுடன், முதல்வர் முனைவர் பா. பாலமுருகன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓரேப் மினிஸ்ட்ரியின் போதகர் ஜா.ஜான் பிராங்கிளின் அவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் ர. சுகுமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் , மாணவ மாணவிகளும் கலந்த கொண்டு வாழ்க்கைக்கு பயனுள்ள தகவல்களை பெற்றுக் கொண்டதோடு மிகுந்த மணமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர். ச.இஸபெல்லா அவர்கள் ஒருங்கினைத்திருந்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: