En Thedal Nee | என் தேடல் நீ | Christian devotional song | கிறித்தவ பக்தி பாடல் | Lyrics Video
Автор: DB Media Music
Загружено: 2019-08-26
Просмотров: 4468
என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே
என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே (2)
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே (2)
ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே (2)
உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே (2)
Singer - Svarnalatha
Orchestration - Nellai Jesurajan
Producer - Fr.Thanasekar
Rights Handed over - Alaihal Media
#EnTheadalNee #ChristianReligiousSongs #DBMediaMusic
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: