1-1-2026 சற்றுமுன் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் புதிய அறிவிப்பு
Автор: Tamil Thagaval - தமிழ் தகவல்
Загружено: 2025-12-12
Просмотров: 19230
1-1-2026 சற்றுமுன் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் புதிய அறிவிப்பு: 2020 ஏப்ரல் 27 முதல் 2025 செப்டம்பர் 30 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் சேர்ந்த காலாண்டை அடிப்படையாக கொண்டு 2025–2026ல் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்த மாதங்கள் தகுதி பெறும் தேதி
அக்டோபர், நவம்பர், டிசம்பர் 01.10.2025
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 01.01.2026
ஏப்ரல், மே, ஜூன் 01.04.2026
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 01.07.2026
அதேப்போல் 26.04.2020 அல்லது அதற்கு முன்பாக பணியில் சேர்ந்திருந்தும் இதுவரை ஒருமுறையும் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்யாத ஊழியர்களும், தங்கள் சேர்ந்த மாதத்தை பொறுத்து 2025–2026ல் முதல் முறையாக சரண்டர் செய்யலாம். இந்த உத்தரவு மாநிலத்தின் அனைத்து துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் /சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: