சாய் பாபா கவசம் - SAI BABA KAVASAM || SHIRDI SAI BABA SONGS || ASHIRVAD || DEEPIKA || VIJAY MUSICALS
Автор: Vijay Musical
Загружено: 1 нояб. 2018 г.
Просмотров: 5 539 080 просмотров
''Shirdi ke Data Sabse Mahan''
SAI BABA KAVASAM
ALBUM : MAHAN SAYI
SINGER : DEEPIKA
MUSIC : PRADEEP
LYRICS : SENKATHIRVANAN
Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#saibabakavasam#saibabasong#tamildevotionalsongs#vijaymusicals
சாய் பாபா கவசம்
ஆல்பம் : மகான் சாயி
பாடியவர் : தீபிகா
இசை : பிரதீப்
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
புஷ்பங்களாலே பூஜிக்க வந்தோம் புண்ணிய உருவே சீரடி பாபா
கஷ்டம் கவலை கண்ணீர் போக்கும் கலியுக தெய்வம் நீயே பாபா
அஷ்டதிக்கிலும் உன்புகழ் ஒலிக்கும் அணியணியாக உன்னடி பணியும்
துஷ்டரை ஓட்டும் தூயவன் நீயே தொழுதிட வந்தோம் உன்திருவடியே
சித்துக்கள் பற்பல செய்பவன் நீயே சிந்தையில் கலந்து உரைபவன் நீயே
பித்தனைப் போலே திரிந்தவன் நீயே பேருலகாளும் இறைவன் நீயே
முத்துகளாக மணிமொழிப் பகன்றாய் முழுமனதோடு ஏற்றிட அருள் தா
சத்திய வடிவாய் வாழ்ந்தவன் நீயே சாந்தஸ்வரூபி எங்களின் பாபா
கருணை வடிவே காக்கும் திருவே கணிந்தருள் செய்யும் சீரடி பாபா
வரும் வினை தீர்க்க வந்தவன் நீயே வறுமையில் வாழ்ந்த வள்ளலும் நீயே
பொறுமையில் பூத்த புண்ணியன் நீயே பொன்னும் மணியும் நீ தருவாயே
கருவினை காக்கும் கடவுளும் நீயே கைதொழுவோமே உன்திருவடியே
பிறவியின் பலனை தருபவன் நீயே பெருமைகள் நிறைந்த பெரியவன் நீயே
அறம்பல போற்றும் ஆண்டவன் நீயே அதிசயம் நிகழ்த்தும் அற்புதன் நீயே
தருமத்தை காக்கும் தலைவனும் நீயே தன்னிகரில்லா புனிதனும் நீயே
சுரந்திடும் இரக்கம் உன்னிடம் தானே சுந்தரவடிவே உனைப் பணிவோமே
பெரும் புகழும் பெருமைகள் யாவும் பெறுகிடைச் செய்யும் குருவும் நீயே
சன்னதி வந்து வணங்கி நின்றாலே சங்கடம் போக்கும் சர்குரு நீயே
போராடும் வாழ்க்கை பூவனமாக புரிவாய் அருள்நீ சீரடி பாபா
நல்வழி காட்டும் நாயகன் நீயே நவநிதியாக வந்தவன் நீயே
எளிமையின் வடிவாய் இருப்பவன் நீயே எளியவர் அன்பை ஏற்பவன் நீயே
வளமிகு வாழ்வை தருபவன் நீயே வணங்கிடுவோமே சீரடி பாபா
சிறுவிழிப் பார்வை சிரமங்கள் போக்கும் செவ்விதழ் சிரிப்பு மர்மங்களாகும்
கரங்கள் இரண்டும் அன்பரை அணைக்கும் காலடி இரண்டும் உயிர் நிழல் கொடுக்கும்
அறிவின் ஒளியே ஆற்றலின் நிறைவே அடியவர் வியக்கும் அற்புதத் திருவே
வறுமையை ஓட்டும் வழி வழி நிதியே வருவோம் சீரடி தலமே பாபா
வருவது வரட்டும் துயரங்கள் தரட்டும் உனதருள் இருந்தால் நலமே விளையும்
மறைவது தெரியும் தெரிவது மறையும் மந்திரம் செய்யும் மாயவன் நீயே
முன்வினையாவும் போக்கிட வந்த மூர்த்தியும் நீயே மூலவன் நீயே
வாராய் வாராய் பூமிக்கு விரைந்து தாராய் தாராய் அருளினை மகிழ்ந்து
சந்திரன் சூரியன் அனைத்தும் நீயே தந்தருள்வாயே வானில் ஒளியே
மந்திரம் யாவிலும் மறைந்திருப்பவனே மண்ணுலகாளும் சீரடி பாபா
இடற்பால விலக்கும் இளகிய மனத்தோன் தடைகளை தகர்க்கும் தந்திர குணத்தோன்
விடைப்பல தேடும் வீணருக்கெல்லாம் விளங்கிட முடியா தத்துவம் நீயே
பேசிட உன்புகழ் தேனாய் இனிக்கும் பேரருளாளன் என்பதை உரைக்கும்
நேசனே எங்களை நேசிப்பவனே நின்தாழ் சரணம் சீரடி பாபா
எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே எண்ணிய யாவும் நடத்தி வைப்பாயே
கேட்கும் வரன்கள் நீ தருவாயே கீர்த்திகள் நிறைந்த சீரடி பாபா
அடியார் நெஞ்சை அறிந்தவன் நீயே அளவிட முடியா அருளின் கடலே
குழந்தையின் உள்ளம் கொண்டவன் நீயே குவளையும் காக்கும் சீரடி பாபா
குற்றம் குறைகள் பொருத்தருள்வாயே குளிர்மனத்தோடு அருளிடுவாயே
தேனாய் இனிக்கும் திருவினை உடையாய் தீவினை அகற்றும் திறமுடையோனே
தொட்டது எல்லாம் துலங்கிட அருளும் தூயவன் நீயே சீரடி பாபா
அனைத்தும் நீயே ஆனாய் இங்கே அபயம் தந்து காத்திடும் பாபா
வையகம் போற்றிட வந்தவன் நீயே வணங்கிட வந்தோம் உன்திருவடியே
செய்வது எல்லாம் சிறப்புடன் அமைய செய்திட வேண்டும் சீரடி பாபா
தாயவள் போலே துணையாய் இருந்து தங்கிட வேண்டும் உந்திருக்கரமே
தப்பாய் நாங்கள் நடந்திடும் வேளை தடுத்தாட்கொள்ளல் உந்தன் கடனே
அடியார் மனதில் அமர்ந்திருப்பவனே அருளின் ஆற்றல் நிறைந்திருப்பவனே
வரும் பகை அகற்றும் வல்லமையோனே நலமுடன் வாழ செய்திடுவோனே
கோபத்தை விரட்டும் கொற்றவன் நீயே கோடையில் நிழலாய் வருபவன் நீயே
ஆக்கம் ஊக்கம் அளிப்பவன் நீயே தீர்க்கதரிசியே சீரடி பாபா
வாழ்க்கை முழுதும் வரும் துணை நீயே வாழ்வில் செல்வம் தருவதும் நீயே
எண்ணில் அடங்கா செய்வினை விலக என்றும் துணையாய் இருப்பவன் நீயே
சொல்லில் அடங்கா புகழுடையோனே சொன்னால் இனிக்கும் சுவையுடையோனே
நல்லவர்க்கருளும் நாயகன் நீயே நம்பிய பேர்களின் காவலன் நீயே
தினமுனை பணிந்தால் மனமது தெளியும் தீவினையனைத்தும் நொடியினில் விலகும்
உள்ளம் முழுதும் உன்வசமானால் ஒவ்வொரு நாளும் நலனே விளையும்
மொட்டாய் பூவாய் முகமது மலரும் உன்னெதிர் வந்தால் உள்ளம் மகிழும்
உன்பெயர் சொன்னால் ஊழ்வினையகலும்

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: