எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணிகள்... வேற லெவலுக்கு மாறும் ரயில் நிலையம்
Автор: Dinamalar Kovai
Загружено: 2026-01-17
Просмотров: 4560
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன், 150 ஆண்டுகள் பழமையான ஸ்டேஷன் ஆகும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், அதிக அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின், 24 பெட்டிகள் நிறுத்தவும், கோவை செல்லும் மெமு பாசஞ்சர் ரயில் நிறுத்தவும், பிளாட்பாரங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு வாராந்திர ரயில்கள், இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் ஸ்டேஷனில், கூடுதலாக ரயில்களை நிறுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக இரண்டு ரயில் பாதைகளும், இரண்டு பிளாட்பாரங்களும் கட்ட, ரயில்வே நிர்வாகம்,19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனால் கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க, வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #railway #train #selam #development #ancient #railwaystation #mettupalayam #ooty #ootytrain #tourist
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: