சிங்க கெபியில் & நன்றி பலிகள் பாடல்கள் | Singa kebiyil & Nandri Baligal Songs |Year End Thanksgiving
Автор: CAG Bible Research
Загружено: 2025-12-31
Просмотров: 96
#tamilchristiansongs #tamilchristiansong #worshipsongs #worship #tpm #songwithlyrics #cagchurch #songswithchords #glory #cagchurch #cagchurchpdkt #tpm #tpmhymns
Church of the Almighty God, Machuvadi, Pudukkottai
Email: cagchurchpdkt@gmail.com
Song credits:
Lyrics:
சிங்க கெபியில் நான் விழுந்தேன்(இருந்தேன்)
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம்
கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்
உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்
வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்
தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: