சித்ரா பெளர்ணமி பூஜை - Chitra Pournami 2021 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் , திருவான்மியூர்
Автор: PAMBAN SWAMIGAL TEMPLE OFFICIAL
Загружено: 2021-05-14
Просмотров: 339
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் , திருவான்மியூர்
பிலவ வருடம் சித்திரை 13 திங்கட்கிழமை 26-04-2021 சித்ரா பெளர்ணமி சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து ஷண்முக அர்ச்சனை பிறகு மஹா தீபாரதனை மற்றும் நிலா பூஜை
சித்ரா பெளர்ணமி
சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என்ற
பேராவலால், பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை எனும்ஊரை அடைந்தார்.
அங்குள்ள மயான பூமியில் ஒரு சதுரக் குழி வெட்டச்செய்து, அதைச் சுற்றி முள்வேலி
அமைக்கச் சொன்னார். பின்னர் அக்குழியில் இறங்கி தியான யோகத்தில் ஈடுபட்டார்.
முதல் ஐந்துநாட்கள் பல இன்னல்கள் ஏற்பட்டன. இறைவனின் சடச்சர மந்திரத்தின்
துணையால் இன்னல்கள் களைந்தது. ஏழாம் நாள் இறைவன் முருகப்பெருமான்,
அகஸ்தியர், அருணகிரிநாதர் ஆகிய இருவரும் சூழ, பழனிதண்டாயுதபாணியாய்
சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து, குருவுபதேசம்செய்து வைத்தார் . தொடர்ந்து சுவாமிகள்
தவத்தினை மேற்கொண்டார். முப்பத்தைந்தாம் நாள் ” தவயோகத்தில் இருந்து எழுக”
என்ற குரல்கேட்டது. என் இறைவன் முருகப்பெருமான் கட்டளை இட்டால் மட்டுமே
தவத்தில் இருந்து எழுவேன் என்று உறுதியாகக் கூறினார்.
“இறைவன் முருகன் கட்டளைதான், எழுக” என்று மீண்டும் குரல் கேட்டது.
மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள், தவக்குழியிலிருந்து எழுந்து, அக்குழியை மூன்று முறை
வலம் வந்து, இறைவனுக்கு பல பூஜை முறைகளை செய்யத் தொடங்கினார் .
அன்று சித்திரை மாதம் பெளர்ணமி நாள் ஆகும். பாம்பன்சுவாமிகள் தனது தியான
யோகத்தை நிறைவேற்றி , இறைவனைவழிபட்ட அந்நன்னாளே சிறப்பிற்குரிய நாளாக
கருதப்பட்டு , இன்று வரைதொடர்ந்து கொண்டாடப் படுகிறது.
மகான்களுக்கும், சித்தர்களுக்கும் சிறப்பிற்குரிய நாளாக ”
சித்திரை மாதம், பெளர்ணமி நாள்”
காலங்காலமாக கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: