2025 மிஸ் கூவாகம் ஆனார் நெல்லை ரேணுகா | Miss Koovagam 2025 | Chithirai Festival
Автор: Dinamalar
Загружено: 2025-05-12
Просмотров: 3179
#Partnership தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் கூவாகம் அழகி போட்டி விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்தது.
ஏராளமான திருநங்கைகள் பாட்டு, பரத நாட்டியம், கிராமிய நடனம் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மிஸ்கூவாகம் 2025ம் ஆண்டிற்காக நடந்த அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றனர்.
30 திருநங்கைகள் விதவிதமான உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இறுதி போட்டியாக இரண்டு சுற்றுகளில் தேர்வு செய்யபட்ட 15 திருநங்கைகள் ரேம்ப் வாக் வந்தனர்.
முதல் இடத்தை மாடலிங் செய்யும் திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா பிடித்து மிஸ் கூவாகம் ஆனார்.
கள்ளக்குறிச்சியை சார்ந்த அஞ்சனா 2ம் இடம், கோயம்புத்தூரை சார்ந்த ஆஸ்திகா 3ம் இடம் பிடித்தனர்.
மூவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
6 திருநங்கைகள் மற்றும் ஒரு திரு நம்பி என 7 பேருக்கு இளம் திருநங்கை சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
7 திருநங்கைகளுக்கு சிரிப்பழகி, ரேம்ப்வாக் அழகி, போட்டோகிராபிக் முகம், கட்டுக்கோப்பான உடல் என விருதும் வழங்கப்பட்டன.#MissKoovagam #Villupuram #dinamalar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: