“கைலாயம் இங்கே இருக்கா?” 🔱“ஒரே இடத்தில் குரு + சிவசக்தி!” 🙏“அகத்தியர் ஏன் இங்கு வந்தார்?” 🌿
Автор: Ms media Dindigul chinnalaPatti
Загружено: 2026-01-22
Просмотров: 13
🌿 அகஸ்தியர் புறம் – ஆன்மிக வரலாறு
அப்பனும் அம்மையும் திருமணம் நடைபெறும் திருக்கோல தருணத்தில், உலக சமநிலையை காக்கும் பொருட்டு குருமுனிவரான அகத்தியரை மட்டும் தெற்கு திசை நோக்கி செல்லுமாறு அப்பன் கட்டளையிட்டார்.
இந்தக் கட்டளையால் மனம் வருந்திய அகத்தியர்,
“இந்த சிறு உருவத்தால் உலகை எவ்வாறு சமநிலைப்படுத்த முடியும்?”
என்று தேவர்கள் மற்றும் அசுரர்கள் நகைத்தபோதும்,
அவர்களின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல்
அகத்தியர் பொதிகை மலை நோக்கி, தெற்கு திசை நோக்கி பயணித்தார்.
அந்தப் பாதையில்,
திருமணக் கோலத்தில் அப்பனும் அம்மையும் அகத்தியருக்கு காட்சியளித்து,
அவரது மனவருத்தத்தை அகற்றினர்.
திரும்பும் வேளையில்,
திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலை,
அகத்தியருக்கு கைலாய மலை போல் தோன்றியது.
அந்த தெய்வீக அனுபவத்தின் காரணமாக,
அங்கு சிறிது காலம் தங்கி
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அதனால் அந்த மலை
“வெள்ளிமலை – அகத்தியர் வழிபட்ட ஸ்தலம்”
எனப் புகழ்பெற்றது.
அந்த ஊர் அகத்தியர் தங்கிய ஊர் என்பதால்
“இவூர் – அகத்தியர் புறம்”
என்று அழைக்கப்படுகிறது.
🪔 பக்தி, அன்னதானம், சிவசக்தி அருள்
காலப்போக்கில்,
அம்மலையை நாடி வரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கும் திருப்பணியில்
ஈடுபட்டனர் அங்கு வாழ்ந்த அடியார்கள்.
குறிப்பாக,
ஐயப்ப பக்தர்களுக்கு கம்மங்கூழ், கூலு வழங்கி
அன்னதானம் செய்தனர்.
ஒருநாள்,
சிவசக்தி கனவில் தோன்றி
“நான் இங்கே இருக்கிறேன்”
என்று அருள்புரிந்தார்.
அதன்பின்,
சிவசக்தி சிலை பிரதிஷ்டை செய்து
வழிபாடு தொடங்கப்பட்டது.
இன்று,
குருவருளும் திருவருளும் ஒன்று சேரும் தலம்
👉 அகத்தியர் புறம் – சிவசக்தி பீடம்
எனப் போற்றப்படுகிறது.
🌿 ராமாயண காலத் தொடர்பு
ராமாயண காலத்தில்,
லட்சுமணனை காக்க
சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன்,
மலையை தூக்கி வந்தபோது
விழுந்த சிறு துகள்களே இந்த சிறுமலை எனக் கூறப்படுகிறது.
அதனால்,
இந்த மலை
மூலிகை வளம் நிறைந்த
பொதிகை மலை வனத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
மேலும்,
சித்தர் போகர் மூலிகை பறிக்க வந்த தலம்
என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
🙏 நிறைவு
குலதெய்வ வழிபாடும்
சிவசக்தி வழிபாடும்
ஒருங்கிணைந்து நிறைவேறும்
அற்புத திருத்தலம்
👉 அகத்தியர் புறம் – சிவசக்தி பீடம்
நன்றி 🙏
இறைபணியில்,
மேகா சுந்தர் மீடியா
YouTube Channel
திண்டுக்கல் – சின்னாளப்பட்டி#Agathiyar
#AgathiyarPuram
#SivashaktiPeedam
#TamilSpiritual
#TamilDevotional
#OmNamashivaya
#Siddhar
#SiddharVaralaru
#Dindigul
#Chinnalapatti
#TamilTemple
#HinduSpiritual
#DivineTamil
#TamilReels
#TamilShorts
✨
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: