Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

யஃஜூஜ் மஃஜூஜ் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது / SADEEDUDEEN BAQAVI |Hafiz Abdul Vajith|

Автор: Hafiz Abdul Vajith

Загружено: 2020-11-14

Просмотров: 2878

Описание:

#sadheedhudheenbaqavi #ya'jujma'juj #hafizabdulvajith

குழப்பங்கள் நெருங்கிவிட்டதும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச்சுவர் திறந்துவிட்டதும்.
5520. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (திடுக்கிட்டுத்) தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) தம் கைவிரல்களால் (அரபி எண் வடிவில்) 10 என்று மடித்துக் காட்டினார்கள்.
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்து விட்டால்" என்று பதிலளித்தார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

மறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும் கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும் ஒன்றாகும்.

யார் இந்த கூட்டத்தினர்?

யஃஜூஜ், மாஃஜூஜ் என்பவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் யாபிதுடைய சந்ததியிலுள்ளவர்கள். இவர்கள் மனிதர்களேயாயினும், மனிதர்களிடம் காணப்படாத பழக்கவழக்கங்களையும், முரட்டுத்தனங்களையும், கொடூரத் தன்மைகளையும் உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்களில் சிலர் மிக உயரமானவர்களாகவும், சிலர் மிகக் குட்டையானவர்களாகவும் இருப்பர். இவர்களின் காதுகளும் மிகப் பெரியதாக அகன்று காணப்படும். உயிர்பிராணிகள் அனைத்தையும் தின்னும் வழக்கமுடைய இவர்கள் தங்களில் இறந்தோரையும் தின்பர் என்று கூறப்படுகிறது.

அங்க அடையாளங்கள் பற்றி ஹதீதுகள்:

‘யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : காலித் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு நூல்கள் – அஹ்மத், தப்ரானி.

யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுநூல் – அஹ்மத், தப்ரானி.

இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்’ என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(இதே போல்) ‘நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்’ – புகாரீ ஹதீஸ் (எண் 3348)

ஹழ்ரத் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி படையெடுத்து பயணித்தபோது இரு மலைகளுக்கிடையே சென்றபோது சில மக்களைக் கண்டார்.

அவர்களின் பேச்சு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அதேபோன்று இவர்கள் கூறுவதையும் அம்மக்களால் விளங்கி; கொள்ள முடியவில்லை.

எனவே சமிக்ஞை மூலமே அவர்களுடன் பேச வேண்டியிருந்தது. அம்மனிதர்கள் துல்கர்ணனை நோக்கி

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

“துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (18:94)

மேலும், அவர் அம்மக்களின் கோரிக்கைக்கு இணங்கி எனக்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருப்பின் உங்களுக்கும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் இடையே பெரியதொரு தடுப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்று கூறினார்கள்.

பின்னர் அவர் அம்மக்களை நோக்கி, பெரும் பெரும் இரும்புக் கட்டிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உருக்கி அவை சமமாகக் படிந்த பின்னர் நெருப்பை மூட்டி ஊதுங்கள். அந்த இரும்புக் கட்டிகள் பழுத்து, நெருப்பு போலாகும். அப்பொழுது செம்புப் பாளங்களைக் கொண்டு வந்தால் அவற்றை நான் உருக்கி அந்த இரும்பின் மீது ஊற்றுகிறேன் என்று கூறினார்.

அம்மக்களும் அவ்வாறு கொண்டு வரவே, துல்கர்ணைன் தாம் சொன்னவாறு செய்தார். சுவரை உருவாக்குமுன் நூறு முழம் ஆழத்திலும், ஐம்பது முழம் அகலத்திலும் அடித்தளம் போட்டார்கள். சுவரின் நீளம், மூன்று மைல்கள் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு மலைகளுக்கிடையே பெரியதொரு சுவரைக் கட்டி முடித்த துல்கர்ணைன்:

இது என்னுடைய இறைவனின் அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும் வேளையில் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

மலைகளை இணைத்து மாபெரும் சுவர் உருவான பின்பு அவ்வழியே வழக்கம் போல் வந்த யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் தாங்கள் செல்லும் தடத்தில் இடையூறாக ஒரு சுவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்மீது ஏற முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. அதனைத் துளையிட்டு நுழையவும் இயலவில்லை.

இதுபற்றிய செய்திகளை அல்லாஹு தஆலா 18:96-98 ல் குறிப்பிடுகிறான்.

யஃஜூஜ் மஃஜூஜ் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது / SADEEDUDEEN BAQAVI |Hafiz Abdul Vajith|

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் - சிறப்புரை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் - சிறப்புரை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

லுக்மான் (அலை) தன் மகனுக்கு கூறிய உபதேசங்கள் | sadheedhudheen baqavi |

லுக்மான் (அலை) தன் மகனுக்கு கூறிய உபதேசங்கள் | sadheedhudheen baqavi |

Hilr (alai...) avargalin alagiya varalaru |Abuthahir Baqavi |tamil Bayan |@TamilBayanUlagam

Hilr (alai...) avargalin alagiya varalaru |Abuthahir Baqavi |tamil Bayan |@TamilBayanUlagam

இஸ்ரேலுடன்  12 நாள் போரின் பின்  10 உளவு நிறுவனங்களின் எதிரிகளின்  கட்டளை அறை ஈரானை குறிவைத்தது!

இஸ்ரேலுடன் 12 நாள் போரின் பின் 10 உளவு நிறுவனங்களின் எதிரிகளின் கட்டளை அறை ஈரானை குறிவைத்தது!

ஸலவாத்தின் தனிச் சிறப்புகள் -2 | Moulana Alhaj S.S. Ahmad Baqavi

ஸலவாத்தின் தனிச் சிறப்புகள் -2 | Moulana Alhaj S.S. Ahmad Baqavi

gog and magog | tamil bayan | அட்டூழியம் செய்பவர்கள்

gog and magog | tamil bayan | அட்டூழியம் செய்பவர்கள்

நெருங்கும் சீனா போர் கப்பல்! Trumpக்கு எதிராக 27 நாடுகள்! வெடிக்கும் மூன்றாம் உலகப் போர்!

நெருங்கும் சீனா போர் கப்பல்! Trumpக்கு எதிராக 27 நாடுகள்! வெடிக்கும் மூன்றாம் உலகப் போர்!

45 யஃஜூஜ் மஃஜூஜ்

45 யஃஜூஜ் மஃஜூஜ்

05 History of Prophet Ibrahim Alaihissalam

05 History of Prophet Ibrahim Alaihissalam

இக்கால குடும்ப சவால்கள்?!|TAMILDAWAH TELEVISION|SADIDUDEEN BAQAVI|#bayan #trend #religious #tamil

இக்கால குடும்ப சவால்கள்?!|TAMILDAWAH TELEVISION|SADIDUDEEN BAQAVI|#bayan #trend #religious #tamil

ஈரானின் ராணுவ பலத்தை கண்டுஅச்சத்தால் உறைந்த இஸ்ரேல்! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை | TRUMP

ஈரானின் ராணுவ பலத்தை கண்டுஅச்சத்தால் உறைந்த இஸ்ரேல்! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை | TRUMP

தஜ்ஜால் என்பவன் இப்படித்தான் இருப்பான் அவனை யார் கொள்வார் தெரியுமா.? ┇Ash Sheikh kovai ayub┇

தஜ்ஜால் என்பவன் இப்படித்தான் இருப்பான் அவனை யார் கொள்வார் தெரியுமா.? ┇Ash Sheikh kovai ayub┇

ஈரானை தோற்கடிக்க முடியாது! அமெரிக்காவை எச்சரித்த அரபு நாடுகள் | THUPPARIUM SHAMBU

ஈரானை தோற்கடிக்க முடியாது! அமெரிக்காவை எச்சரித்த அரபு நாடுகள் | THUPPARIUM SHAMBU

பாகம் 2 யஃஜூஜ்    மஜூஜ் உண்மை வரலாறு தமிழ் பயான்  Yajuj majuj history part 2 gog and magog tamil

பாகம் 2 யஃஜூஜ் மஜூஜ் உண்மை வரலாறு தமிழ் பயான் Yajuj majuj history part 2 gog and magog tamil

இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்-40 கர்பலாவின் ஷஹீத் இமாம் ஹுஸைன்  (ரழி)

இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்-40 கர்பலாவின் ஷஹீத் இமாம் ஹுஸைன் (ரழி)

உச்சகட்ட பதற்றம்! சீனாவின் 3 போர் கப்பல்! ரஷ்யாவின் நவீன ஏவுகணை! அதிர்ச்சியில் உறைந்த Trump!

உச்சகட்ட பதற்றம்! சீனாவின் 3 போர் கப்பல்! ரஷ்யாவின் நவீன ஏவுகணை! அதிர்ச்சியில் உறைந்த Trump!

ДУА УТРОМ — НАЧНИ ДЕНЬ С АЛЛАХОМ 🌅🕋

ДУА УТРОМ — НАЧНИ ДЕНЬ С АЛЛАХОМ 🌅🕋

முஸ்லிம்களே! முன் வாருங்கள் ● CMN SALEEM | Tamilnadu muslim kalvi iyakkam

முஸ்லிம்களே! முன் வாருங்கள் ● CMN SALEEM | Tamilnadu muslim kalvi iyakkam

ஜும்ஆ மேடை - இறுதி நபி எடுத்துரைத்த ஏக

ஜும்ஆ மேடை - இறுதி நபி எடுத்துரைத்த ஏக

யார் இந்த மஹ்தி அலை.? எப்போது அவர்கள் வருவார்கள்.? | Moulavi Hussain Manbae Tamil Bayan Imam Mahdi

யார் இந்த மஹ்தி அலை.? எப்போது அவர்கள் வருவார்கள்.? | Moulavi Hussain Manbae Tamil Bayan Imam Mahdi

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com