பர்வத மலை பயணம் # Parvatha malai payanam # Tiruvannamalai # Sivanai thedi # Parvatha Hill trekking
Автор: NELLAI NARAN
Загружено: 2023-06-02
Просмотров: 16697
Vellaiyangiri Malai payanam #
• வெள்ளையங்கிரி மலை பயணம் | பூண்டி | VELLAIY...
please subscribe my channel and support me
parvatha malai payanam / பர்வத மலை பயணம்/
இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம்.
இந்த மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல இருக்கின்றன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் காணப்படுகின்றன. அந்தக் குகைகளில் இப்போதும் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். மூலிகைக் காற்றைச் சுவாசித்து சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கென்றே பல்வேறு சிரமங்களைக் கடந்து மலையேறுகிறார்கள்.
பாறைகளால் ஆன படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படி, கரடுமுரடான பாறைகள் எனச் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு மலையேற வேண்டும். மலையேறும்போது செங்குத்துப் பாறை, பாழடைந்த கோட்டையின் சுவர்கள், இருபுறமும் காணப்படும் பாதாளப் பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் காணும்போது நமக்குள் அச்ச உணர்வு ஏற்பட்டாலும், மல்லிகார்ஜுனரை தியானித்ததுமே அச்சம் மறைந்து, மல்லிகார்ஜுனரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிடுகிறது. பசுமையான பள்ளத்தாக்கு, சாரல் பொழிந்தபடி நம்மைத் தழுவிச் செல்லும் மேகங்கள்... என மிக ரம்மியமான அனுபவம் அது. மலையில் உயரமான ஒற்றைப் பெரும்பாறையில் அமைந்திருக்கிறது மல்லிகார்ஜுனர் கோயில். கோயிலுக்கு அருகில் ஒரு மடம் இருக்கிறது. அங்கிருக்கும் சாது ஒருவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதுடன், அன்னதானமும் செய்து வருகிறார். குடிப்பதற்கு சுவையான தண்ணீரும் கொடுத்து வழியனுப்புகிறார். இடைப்பட்ட வழியில் எங்குமே தண்ணீர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கதவுகள் இல்லாத இந்தக் கோயிலுக்கென்று அர்ச்சகர்களும் கிடையாது. கோயிலுக்குள் சென்றதுமே நாம் முதலில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசிக்கலாம். இறைவன் மல்லிகார்ஜுனரும் அம்பிகை பிரமராம்பிகை தேவியும் தனித் தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் ஆராதனை செய்து ஆனந்தம் அடைகிறார்கள். மல்லிகார்ஜுனரை வழிபட்டால், காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.
கோயிலில், 18 சித்தர்களும் சிவபெருமானை வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். சித்தர்கள் சூட்சும வடிவில் அனுதினமும் சிவபெருமானை வழிபடுவதாகக் கூறுகிறார்கள் பக்தர்கள். மல்லிகார்ஜுனரை வழிபட்டால் சித்தர்களின் அருளும் கிடைக்குமாம். மலையேறும் பக்தர்களுக்கு சித்தர்களே நாய் வடிவில் வழிகாட்டி அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் அதிசயமும் இங்கு நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது.
பௌர்ணமி மற்றும் அமாவாசை இரவில் மலையேறி, கோயிலில் தங்கியிருந்து, மல்லிகார்ஜுனரை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மலையேறி இறைவனைத் தரிசித்து முடித்ததும் மனதுக்கு அமைதியும் உடலுக்கு உற்சாகமும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரவைக்கும் அற்புதமானத் தலம் இது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: