"ETRAAN MARAKKAEN"("எற்றான் மறக்கேன்")~SUNDHARAR DHEVARAM ~BY MAYILAI SRI Pa. SARGURUNATHAN.
Автор: Balasundharam Subramaniam
Загружено: 2023-08-27
Просмотров: 1318
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்.
ஏழாம் திருமுறை.
092-திருப்புக்கொளியூர்அவினாசி.
பண் : குறிஞ்சி.
ராகம் : ஹரிகாம்போதி.
திருச்சிற்றம்பலம்.
எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே. 1.
வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே. 2.
எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே. 3.
உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே. 4.
அரங்காவ தெல்லா மாயிடு
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி
யூர்அவி னாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்
டகுழைக் காதனே. 5.
நாத்தா னும்உனைப் பாடல்அன்
றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி
யூர்அவி னாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட
குற்றமுங் குற்றமே. 6.
மந்தி கடுவனுக் குண்பழம்
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலம்புட்பம்
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி
யூர்அவி னாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன்
நரகம் புகாமையே. 7.
பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே. 8.
நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே. 9.
நீரேற ஏறு நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே. 10.
திருச்சிற்றம்பலம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: