ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த புண்ணியவான் கர்னல் ஜான் பென்னிகுக்
Автор: Dinamalar District News
Загружено: 2026-01-15
Просмотров: 40
ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த புண்ணியவான் கர்னல் ஜான் பென்னிகுக் | Theni | 185th Birth Anniversary of Colonel John Pennycuick, who built the Mullaperiyar Dam
தன் சொந்த நிதியில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய மகான் இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்.
இயற்கை பேரிடர்களுக்கு முன் கடும் சிரமத்திற்கு இடையே முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் மகான் என அழைக்கப்படுகிறார்.
அவரது கருணையால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் குடிநீர் பருகி வருகின்றனர். ஐந்து மாவட்ட விவசாயம் செழித்தோங்கி வருகிறது.
அவரது 185 வது பிறந்த நாள் விழா இன்று ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பென்னிகுக் மணிமண்டபத்தில்
பொங்கல் வைத்து வழிபாடு
தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள கர்னர் ஜான் பென்னிகுக் மணிமண்டபத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விழாவிற்கு தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார். எம்பி தங்கத்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் போன்ற கலைகளுடன் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற கலெக்டர் மற்றும் எம்பி ஆகியோர் மாட்டுவண்டியில் பயணம் செய்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
பென்னிகுக் நினைவாக பொதுமக்கள் வைத்த பொங்கலை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டு சிறந்த பொங்கலுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் விவசாயிகள், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்# #185thBirthAnniversary #ColonelJohnPennycuick #MullaiperiyarDam #EngineeringLegend #IndianHistory #HistoricalMilestone
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: